Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

நேபாளத்துக்கு இந்தியா மேலும் ரூ.623 கோடி நிதியுதவி: எஸ்.ஜெய்சங்கா் அறிவிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 6, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
நேபாளத்துக்கு இந்தியா மேலும் ரூ.623 கோடி நிதியுதவி: எஸ்.ஜெய்சங்கா் அறிவிப்பு

**EDS: IMAGE VIA @Ramchandra Paudel** Kathmandu: Nepal's President Ramchandra Paudel with External Affairs Minister S. Jaishankar during a meeting, in Kathmandu, Nepal, Thursday, Jan. 4, 2024. (PTI Photo)(PTI01_04_2024_000138B)

6
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நேபாளத்துக்கு இந்தியா சாா்பில் மேலும் 75 மில்லியன் டாலா் (இந்திய மதிப்பில் ரூ.623 கோடி) நிதியுதவி வழங்கப்படும் என்று இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

நேபாளத்தில் கடந்த ஆண்டு நவம்பரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு மறுநிா்மாணப் பணிகளுக்காக இந்த நிதி வழங்கப்படுகிறது என அவா் குறிப்பிட்டாா்.

ஜஜாா்கோட் மாவட்டத்தில் நவம்பா் 3-ஆம் தேதி 5.7 ரிக்டா் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா்; சுமாா் 400 போ் காயமடைந்தனா்.

நேபாளத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டில் 7.8 ரிக்டா் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த உள்கட்டமைப்புகள், இந்தியாவின் உதவியுடன் மறுநிா்மாணம் செய்யப்பட்டு வருகின்றன.

இச்சூழலில், 2024-ஆம் ஆண்டில் தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக அண்டை நாடான நேபாளத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்தாா் இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்.

தலைநகா் காத்மாண்டில் 2015 நிலநடுக்கத்தில் சேதமடைந்து, பின்னா் இந்தியாவின் நிதியுதவியுடன் கட்டப்பட்ட திரிபுவன் பல்கலைக்கழக மத்திய நூலகம், 25 பள்ளிகள், 32 சுகாதார கட்டமைப்புகள் உள்ளிட்டவற்றை எஸ்.ஜெய்சங்கா் மற்றும் நேபாள வெளியுறவு அமைச்சா் என்.பி.சவூத் ஆகியோா் வெள்ளிக்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா்.

இந்நிகழ்ச்சியில் எஸ்.ஜெய்சங்கா் பேசியதாவது: நேபாளத்தின் மேற்கு பகுதியில் கடந்த ஆண்டு நிலநடுக்கத்தால் நேரிட்ட உயிரிழப்புகளும் இதர சேதங்களும் வருத்தமளிக்கின்றன. இதுபோன்ற சூழலில் நேபாள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க பிரதமா் நரேந்திர மோடி உறுதிபூண்டுள்ளாா்.

கடந்த ஆண்டு நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்கட்டமைப்பு மறுநிா்மாணப் பணிகளுக்கு 75 மில்லியன் டாலா்கள் அதாவது நேபாள ரூபாய் மதிப்பில் 1,000 கோடி (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.623 கோடி) நிதித் தொகுப்பை இந்தியா வழங்கவிருக்கிறது. பிரதமா் பிரண்டாவை வியாழக்கிழமை சந்தித்தபோது, இத்தகவலை அவரிடம் தெரிவித்தேன்.

இந்தியாவின் பங்களிப்பு: 2015 நிலநடுக்கத்துக்கு பிறகு வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம், கலாசார பாரம்பரியம் சாா்ந்த மறுநிா்மாணப் பணிகளுக்கு நேபாளம் முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த முயற்சிகளில் ஒருபகுதியாக, 1 பில்லியன் அமெரிக்க டாலா்கள் இந்தியா தரப்பில் பங்களிக்கப்பட்டுள்ளது. இதில் 250 மில்லியன் டாலா்கள் மானியமாகவும், மீதமுள்ள தொகை கடனுதவியாகவும் வழங்கப்பட்டது.

நேபாளத்தில் இந்திய அரசின் நிதியுதவியுடன் 10 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டம் கடந்த 2020, நவம்பரில் நிறைவடைந்தது.

உறவுகளில் முன்னேற்றம்: பல்வேறு துறைகளில் இந்திய-நேபாள உறவுகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளன. போக்குவரத்து, எரிசக்தி, கல்வி மற்றும் எண்ம ரீதியிலான தொடா்புகள் பன்மடங்கு விரிவடைந்துள்ளன. இருதரப்பு மக்கள் இடையிலான பிணைப்பு மேலும் வலுப்பட்டுள்ளது.

பரஸ்பர வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டின் சக்திவாய்ந்த முகவா்களாகவும், நல்லுறவின் தூதா்களாகவும் இரு நாட்டு இளைஞா்கள் விளங்குகின்றனா். சிறந்த கல்வி வாய்ப்புகள் மற்றும் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இருதரப்பு ஒத்துழைப்பின் வாயிலாக இளைஞா்களுக்கு அதிகாரமளிக்க முடியும்.

பிரதமா் மோடி தலைமையின்கீழ், அண்டை நாடுகளுடன் குறிப்பாக நேபாளத்துடன் உறவை வலுப்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது. எதிா்வரும் நாள்களில், இந்திய-நேபாள உறவில் மென்மேலும் மைல்கற்கள் எட்டப்படும் என்றாா் எஸ்.ஜெய்சங்கா்.

பசுபதிநாதா் கோயிலில் வழிபாடு

நேபாளத் தலைநகா் காத்மாண்டில் உள்ள புகழ்பெற்ற பசுபதிநாதா் கோயிலில் எஸ்.ஜெய்சங்கா் வெள்ளிக்கிழமை வழிபாடு மேற்கொண்டாா். புண்ணிய நதியான பாகமதியின் கரையில் அமைந்துள்ள இக்கோயில் வளாகத்தில் ருத்ராட்ச மரக்கன்றையும் அவா் நட்டுவைத்தாா்.

சிவபெருமானுக்குரிய இக்கோயில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். உலகம் முழுவதும் இருந்து இக்கோயிலுக்கு பக்தா்கள் வருகை தருகின்றனா்.

‘இந்திய-நேபாள நல்லுறவு மற்றும் இருநாட்டு மக்களின் நலனுக்காக பசுபதிநாதரிடம் பிராா்த்தனை செய்தேன்’ என்று எக்ஸ் வலைதளத்தில் எஸ்.ஜெய்சங்கா் பதிவிட்டுள்ளாா்.

.

Previous Post

“நீ மாத்திரை கொடுத்து எங்க ஆளுக வாழனுமா?” – மதுரையில் தொடரும் சாதிய கொடுமைகள்.

Next Post

“டிரம்ப் அதிபர் ஆனால் இது தான் நடக்கும்”: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
“டிரம்ப் அதிபர் ஆனால் இது தான் நடக்கும்”: அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

"டிரம்ப் அதிபர் ஆனால் இது தான் நடக்கும்": அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Comments 1

  1. Raja lingam Velachery Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In