Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

பாஜகவின் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட… : கேஜரிவால் பதிவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 5, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
பாஜகவின் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட… : கேஜரிவால் பதிவு!
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். சர்வதிகார காலத்தில் சிசோடியாவின் துணிச்சலை அவர் பாராட்டியுள்ளார்.

சிசோடியா, மதுபான ஊழல் வழக்கில் தற்போது சிறையில் உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ அவரைக் கைது செய்தது.

பாஜவின் பொய் வழக்கில் சிசோடியா சிறையில் உள்ளதாக கேஜரிவால் குற்றம் சாட்டியுள்ளார்

அவர் பதிவில், “இந்த நட்பு பழமையானது. எங்களது நட்பும் நம்பிக்கையும் மிக உறுதியானது. மக்களுக்காக பணியாற்றும் ஆர்வமும் மிக பழமையானது. சதி செய்பவர்கள் எவ்வளவு முயற்சித்தாலும் இந்த நட்பு, பாசம் மற்றும் நம்பிக்கை உடையாது” என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

மேலும், பொய் வழக்கில் சிசோடியாவை 11 மாதமாக மத்திய அரசு சிறையில் வைத்துள்ளதாகவும் அவர்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக மணீஷ் நிற்பதாகவும் அது எதிர்காலத்திலும் தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தில்லி அமைச்சர் அதிஷி, சிசோடியா கையாண்ட துறைகளுக்குப் பொறுப்பு வகிக்கும் இவர், முன்னாள் துணை முதல்வருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

உலகில் சிறந்த கல்வி அமைச்சராக சிசோடியா விளங்கியதாக அதிஷி புகழாரம் சூட்டியுள்ளார்.

2021-22 ஆம் ஆண்டு ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற மதுபான ஊழல் குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணை கோரப்பட்டது. இதில் தொடர்புடையதாக சிசோடியா கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

.

Previous Post

பிப்ரவரியில் உதயநிதி துணை முதல்வர் ஆகிறாரா.?

Next Post

தோனியை ஏமாற்றிய அவரது பார்ட்னர்கள்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தோனியை ஏமாற்றிய அவரது பார்ட்னர்கள்.

தோனியை ஏமாற்றிய அவரது பார்ட்னர்கள்.

Comments 1

  1. ராஜலிங்கம் வேளச்சேரி சென்னை says:
    3 years ago

    வழக்கின் தன்மை உண்மையா பொய்யா என்பதை நீதிமன்றத்தில் தான் நிரூபிக்க இயலும் எப்படியோ அவர் 11 மாதங்களாக சிறையில் உள்ளதாக கெஜ்ரிவால் கூறுகிறார் 11 மாதங்களாக சிறையில் இருக்கும் அவரை கெஜ்ரிவால் காப்பாற்ற இயலவில்லை என்பதே உண்மை அரவிந்த் கெஜ்ரிவால் முன் ஜாமின் எடுக்காவிட்டால் விரைவில் இவரும் கைது செய்யப்படுவார் சிறையில் தள்ளப்படுவார் கெஜ்ரிவால் அவர்களே துணை முதல்வரை தான் உங்களால் காப்பாற்ற இயலவில்லை உங்களையாவது நீங்கள் காப்பாற்றிக் கொள்ளுங்கள்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In