Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்தத் தடையும் இல்லை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்தத் தடையும் இல்லை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!
25
SHARES
40
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், ‘’ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது’’ என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றம்.

உச்ச நீதிமன்றம்.

அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் அப்போது திமுக அமைச்சரவையில் மின்துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். கைது செய்யப்பட்டு சிறை சென்றதால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12-ம் தேதி 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிமன்றங்கள் நிராகரித்தன. இதற்கு நடுவே, செந்தில் பாலாஜியை அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக அறிவித்தார் ஆளுநர் ரவி. இருப்பினும் இன்று வரை செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார்.

செந்தில் பாலாஜி

செந்தில் பாலாஜி

இதனிடையே, ‘இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அந்த பதவியில் நீட்டிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக்கோரி அதிமுக முன்னாள் எம்.பி-யான ஜெயவர்த்தன், வழக்கறிஞர் எஸ்.ராமசந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதேபோல் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும், இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த ஆளுநர் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்குகளில் தங்களால் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும், அவர் அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பதை முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி வழக்குகளை முடித்து வைத்தனர்

முதல்வர்  ஸ்டாலின் - ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல்வர் ஸ்டாலின் – ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  வழக்கறிஞர் எம்.எல்.ரவி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘’ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்ய ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவு சரியானது. எனவே, இந்த விவகாரத்தில் தலையிட தேவையில்லை’’ என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Previous Post

சீமான் மீது கர்நாடகாவில் வழக்கு தொடரப்போகிறேன் – மறுபடியும் ஆரம்பித்தார் விஜயலட்சுமி!

Next Post

தாவூத்தின் 4 சொத்துக்கள் இன்று வெறும் ₹19 லட்சத்தில் ஏலம்; இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி ஏலம் எடுக்க உள்ளார்.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
தாவூத்தின் 4 சொத்துக்கள் இன்று வெறும் ₹19 லட்சத்தில் ஏலம்; இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி ஏலம் எடுக்க உள்ளார்.

தாவூத்தின் 4 சொத்துக்கள் இன்று வெறும் ₹19 லட்சத்தில் ஏலம்; இந்து மகாசபை தலைவர் சுவாமி சக்ரபாணி ஏலம் எடுக்க உள்ளார்.

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    இந்த பத்து ரூபாய் பாலாஜியின் அமைச்சர் பதவியை பாதுகாக்க உச்சநீதிமன்றம் உத்தரவு போட்டு உள்ளது எனவே இனிமேல் தைரியமாக இந்த பத்து ரூபாய் பாலாஜி தண்ட சம்பளம் வாங்கலாம் ஒரு அமைச்சர் குறிய அனைத்து சலுகைகளையும் தண்டமாக பெறலாம்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In