Saturday, November 14, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

சீமான் மீது கர்நாடகாவில் வழக்கு தொடரப்போகிறேன் – மறுபடியும் ஆரம்பித்தார் விஜயலட்சுமி!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 5, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
சீமான் மீது கர்நாடகாவில் வழக்கு தொடரப்போகிறேன் – மறுபடியும் ஆரம்பித்தார் விஜயலட்சுமி!
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சீமான் மீது கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக நடிகை விஜயலட்சுமி மீண்டும் வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரம் தற்போது மீண்டும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் திரைப்பட இயக்குநராக இருந்தபோது, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த 2011ம் ஆண்டு முதல் புகார் அளித்து வருகிறார். சீமான் தன்னை ஏமாற்றிவிட்டார் என கண்டபடி பேசி அடிக்கடி வீடியோக்களையும் வெளியிட்டு வந்தார் விஜயலட்சுமி.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீமான் மீது சென்னை கமிஷனர் அலுவலகம் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் விஜயலட்சுமி. அவருக்கு தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமி ஆதரவாக இருந்து வந்தார். விஜயலட்சுமி அளித்த புகாரின் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் திடீரென வழக்கை வாபஸ் பெற்றார் விஜயலட்சுமி.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி, வழக்கை வாபஸ் பெற சீமானிடம் இருந்து பணம் பெறவில்லை என்றும், தமிழ்நாட்டில் தனக்கு யாரும் ஆதரவு அளிக்கவில்லை என்றும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கர்நாடகாவுக்கே செல்வதாகவும் கூறினார். மேலும் தனக்கு ஆதரவாக இருந்த வீரலட்சுமி மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறினார் விஜயலட்சுமி.

ஒரு வழியாக இந்த விவகாரம் முடிந்துவிட்டதாக நினைத்த நேரத்தில், கர்நாடகா சென்ற பிறகு மீண்டும் சீமான் மற்றும் வீரலட்சுமி மீது குற்றச்சாட்டுக்களை கூறி வீடியோக்களை வெளியிட ஆரம்பித்தார் விஜயலட்சுமி. இந்நிலையில் நடிகை விஜயலட்சுமி தற்போது மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “2 பெண்களை வைத்து திமுக அரசியல் செய்வதாக சீமான் கூறினார். திமுக என்னை வைத்து அரசியல் செய்தால் எனக்கு நியாம் பெற்றுக்கொடுத்திருப்பார்கள்.

விஜயலட்சுமி

விஜயலட்சுமி

இது ஒன்றும் தீர்க்க முடியாத வழக்கு இல்லை. பெரியவங்க இருக்காங்க, அவங்களுக்கு எல்லாம் தெரியும். ஆகஸ்ட் மாதம் முதல் ஜனவரி வரை தமிழ்நாட்டு போலீசார் சீமான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சீமான் கடந்த மார்ச் மாதம் மதுரை செல்வத்தை வைத்து பேசி, கயல்விழிக்கு தெரியாமல் 50 ஆயிரம் கொடுப்பதாக சொன்னார். என்னிடம் இருந்த ஆதாரத்தை எல்லாம் பிடுங்கி கொண்டார்கள். வீடியோக்களை பெற்றுக்கொண்டு என்னை டார்ச்சர் செய்தார் சீமான்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட என் அக்காவை அழைத்துக்கொண்டு தமிழ்நாட்டிற்கு வந்து போலீஸில் புகார் அளித்தேன். எல்லோரும் வேடிக்கைதான் பார்த்தார்கள். 2011 தேர்தலின் போது அதிமுக, சீமானை பாக்கெட்டில் போட்டுக்கொண்டு, என் புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இப்போது எம்.பி தேர்தல் வருகிறது. நான் யாருக்கும் ஒத்துழைக்க மாட்டேன். சீமானுக்கு பயந்து நாங்கள் தங்குவதற்கு கூட தமிழ்நாட்டில் வீடு கொடுக்கவில்லை. அப்போது எனக்கு கர்நாடகாதான் உதவி செய்தது.

என் அம்மா பிணத்தை வைத்துக்கொண்டு இறுதிச்சடங்கு செய்ய முடியாமல் தவித்தேன். அப்போதும் எனக்கு கர்நாடகாதான் உதவியது. கர்நாடகாவில் பிறந்தேன் என்ற ஒரே காரணத்திற்காக 12 வருடங்களாக தமிழ் மண்ணில் என்னை கதற விடுகிறீர்கள். 12 வருடங்களாக தமிழ்நாட்டு போலீசார் ஆதாரங்களை வாங்கி வைத்துக்கொண்டு அழித்து விடுகிறார்கள். இப்போது

என் போனை வாங்கி வைத்துள்ளார்கள். சீமான் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. சீமான் – விஜயலட்சுமி போரை முடிவுக்கு கொண்டு வர கர்நாடக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறேன். கர்நாடக நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடருவேன்” என்று தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். விஜயலட்சுமி மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்துவிட்டாரா என சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Previous Post

குடியரசுதின விழா அணிவகுப்பில் பங்கேற்க அன்னை பாத்திமா கல்லூரி மாணவி தேர்வு..

Next Post

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்தத் தடையும் இல்லை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்தத் தடையும் இல்லை – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர எந்தத் தடையும் இல்லை - உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    சென்னையில் கிழித்த கிளிப்பு போதாது என்று கர்நாடகாவில் போய் என்னத்த கிழிக்க போகிறார்

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In