அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைs சட்ட வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை, மற்றும் ஆவணங்களை அமலாக்கத்தையினர் டிரங்கு பெட்டியில் தாக்கல் செய்தனர். ஜாமீன் நிராகரிக்கப்பட்ட நிலையில் புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி காட்சி மூலமாக ஆஜார்படுத்தபட்டார்.
இதனையடுத்து செந்தல் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 11ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். இதன் மூலம் 14வது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டுள்ளது. இந்த நிலையில், செந்தில்பாலாஜியின் ஜாமின் கோரி 3வது முறையாக தாக்கல் செய்த மனு வரும் திங்கட்கிழமை (ஜனவரி 8) விசாரணைக்கு வரவுள்ளது. இந்த மனு குறித்து பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


இந்த பத்து ரூபாய் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டிப்பு செய்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன் காவல் நீட்டிப்பை வரவேற்கிறேன்