Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த போலி இன்ஸ்பெக்டர் கைது..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 3, 2024
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த போலி இன்ஸ்பெக்டர் கைது..!
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

பெங்களூரு: அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த, போலி லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர், கைது செய்யப்பட்டு உள்ளார்.

பெங்களூரு விதான் சவுதாவில், வருவாய் துறை அலுவலக அதிகாரி ராமதாஸ், 50. கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவரிடம் மர்மநபர் ஒருவர், மொபைல் போனில் பேசினார். லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் என்று கூறினார்.

‘உங்கள் மீது லோக் ஆயுக்தாவிற்கு, நிறைய புகார் வருகிறது. விசாரணை நடத்தாமல் இருக்க, பணம் தர வேண்டும்’ என்று கூறினார். இதுகுறித்து விதான் சவுதா போலீசில், ராமதாஸ் புகார் செய்தார். போலீசார் விசாரித்தனர்.

இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த ஸ்ரீநாத்ரெட்டி, 34 என்பவரை நேற்று முன்தினம், பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் லோக் ஆயுக்தா இன்ஸ்பெக்டர் என்று கூறி, கர்நாடகா, ஆந்திராவில் 50 அரசு அதிகாரிகளை மிரட்டி, பணம் பறித்தது தெரியவந்தது.

தெலுங்கு திரைப்படம் ஒன்றில் அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறிக்கும் காட்சிகளை பார்த்து, அதேபோன்று அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததும் அம்பலமானது.

இதுதவிர பெங்களூரு பேகூர், எலக்ட்ரானிக் சிட்டி, அத்திப்பள்ளி, ஹெப்பகோடி, ஜிகனி, சூர்யாநகர், கோலார் டவுன் போலீஸ் நிலையங்களில், இவர் மீது திருட்டு வழக்கு பதிவாகி இருப்பதும் தெரிந்தது.

‘ஸ்ரீநாத்ரெட்டியின் மிரட்டலுக்கு பயந்து பணம் கொடுத்த, அரசு அதிகாரிகள் அவர் மீது புகார் அளிக்க வேண்டும்’ என்று, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா கூறியுள்ளார்.

.

Previous Post

ஜப்பானை தொடர்ந்து ஆப்கானிஸ்தானையும் உலுக்கிய நிலநடுக்கம்: அரை மணிநேரத்தில் இருமுறை குலுங்கியது

Next Post

அஸ்ஸாமில் லாரி- பேருந்து மோதி கோர விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அஸ்ஸாமில் லாரி- பேருந்து மோதி கோர விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம்

அஸ்ஸாமில் லாரி- பேருந்து மோதி கோர விபத்து: 12 பேர் பலி, 25 பேர் காயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In