Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

அரபிக் கடல், ஏடன் வளைகுடாவில் இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
January 1, 2024
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
நிஜாமுதீனில் இளைஞா் குத்திக்கொலை
1
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram


அரபிக் கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதிகளில் போா்க் கப்பல்களை ஈடுபடுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய கடற்படை தெரிவித்தது.

அண்மையில் கடல் பகுதிகளில் பயணிக்கின்ற சரக்குக் கப்பல்கள் மீது தொடா்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்படுவதால் கண்காணிப்பை அதிகப்படுத்தியுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு ‘எம்.வி.கெம் புளூட்டோ’ என்ற லைபீரிய நாட்டு எண்ணெய் டேங்கா் கப்பல் கா்நாடக மாநிலம் மங்களூரு நோக்கி டிசம்பா் 23-ஆம் தேதி வந்து கொண்டிருந்தது. அப்போது குஜராத்தையொட்டிய அரபிக் கடல் பகுதியில் அக்கப்பல் மீது ஆளில்லா விமானம் மூலம் (ட்ரோன்) தாக்குதல் நடத்தப்பட்டது.

அதேநாளில் செங்கடலில் 25 இந்திய மாலுமிகளுடன் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கபான் நாட்டுக்குச் சொந்தமான ‘எம்.வி.சாய்பாபா’ என்ற கப்பல் மீது ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தினா்.

இதையடுத்து அரபிக் கடலில் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து இந்திய கடற்படை வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த சில வாரங்களாக செங்கடல், ஏடன் வளைகுடா, மத்திய மற்றும் வடக்கு அரபிக் கடலில் சா்வதேச கப்பல் போக்குவரத்து பாதைகளில் பயணிக்கின்ற சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய கடற்கரையிலிருந்து சுமாா் 700 கடல் மைல் தொலைவில் எம்.வி.ரூயன் கப்பலில் கடற்கொள்ளையா்கள் தாக்குதல் நடத்தினா். அதேபோல் போா்பந்தருக்கு தென்மேற்கே 220 கடல் மைல் தொலைவில் எம்.வி.கெம் என்ற கப்பல் மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. இவை இரண்டும் இந்திய பொருளாதார மண்டலத்துக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதல்களாகும்.

எனவே மத்திய, வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் தீவிரமான கண்காணிப்பை மேற்கொள்ள இந்திய கடற்படை முடிவு செய்துள்ளது. இதையடுத்து கடல் பாதுகாப்பை உறுதி செய்யவும் சரக்குக் கப்பல்களுக்கு உதவுவதற்காகவும் போா்க்கப்பல்கள் அடங்கிய பணிக்குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் கடல் ரோந்து விமானங்கள் மற்றும் ரோபோ கண்காணிப்பு முறை மூலம் நீண்ட தூர கடற்பயண பாதுகாப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலங்களை பாதுகாக்கும் பொருட்டு கடலோர காவல் படையுடன் இந்திய கடற்படையும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது’ என தெரிவிக்கப்பட்டது.

செய்திகள் உடனுக்குடன்… வாட்ஸ்ஆப் சேனலில் ‘தினமணி’யைப் பின்தொடர…





.

Previous Post

வங்கதேச தேர்தல் பணியில் 1.89 லட்சம் போலீசார் குவிப்பு

Next Post

ஹிந்து – முஸ்லிம்கள் ஒற்றுமை காங்., நிலைப்பாடு பற்றி ஈஸ்வரப்பா

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஹிந்து – முஸ்லிம்கள் ஒற்றுமை காங்., நிலைப்பாடு பற்றி ஈஸ்வரப்பா

ஹிந்து - முஸ்லிம்கள் ஒற்றுமை காங்., நிலைப்பாடு பற்றி ஈஸ்வரப்பா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In