வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
புதுடில்லி: ” ஒரு ராணுவ வீரர்களின் கடமையும் பொறுப்பும் தனித்துவமானது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்கொள்கிறார்கள்” என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராஜ்நாத் சிங் கூறியிருப்பதாவது: இந்த தேசத்தில் பணிபுரியும் விஞ்ஞானிகளாக இருந்தாலும், தொழிலதிபர்களாக இருந்தாலும் அவர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்ய முடிகிறது. இதற்கு காரணம் எல்லையில் பணிபுரியும் ராணுவ வீரர்கள் தான். நாட்டு மக்கள் அனைவரும் ராணுவ வீரர்களுக்கு கடமைப்பட்டுள்ளோம். ராணுவ வீரர்களின் கடமையும் பொறுப்பும் தனித்துவமானது. ஏனென்றால் அவர்கள் ஒவ்வொரு நாளும் மரணத்தை எதிர்கொள்கிறார்கள்.
எதிரி தோட்டா எங்கிருந்தும், எந்த நேரத்திலும் வரக்கூடும் என்பது அவர்களுக்கு தெரியும். இதை அறிந்திருந்தும் நமது துணிச்சலான வீரர்கள் தேசப் பெருமையுடன் நமது எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நமது ராணுவ வீரர்கள் இந்த தேசத்தின் மீது அன்பு கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஒரு வலுவான தேசிய சுயமரியாதை உணர்வு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


