புதுச்சேரி ரயில் நிலையத்தில், 18 ஆண்டுகளுக்கு பின், ரயில் தண்டவாளங்களை மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.
நாடு முழுவதும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் விதமாக, பழைய ரயில் தண்டவாளங்களை மாற்றி புதிய தண்டவாளங்களை அமைக்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரி ரயில் நிலையத்திலும் சோனாம்பாளையம் சந்திப்பிலிருந்து, வாணரப்பேட்டை சந்திப்பு வரை உள்ள நான்கு ரயில் பாதைகளை, 18 ஆண்டுகளுக்கு பின் மாற்றும் பணிகள் நேற்றுமுன்தினம் துவங்கியது.
முதலாவது பாதையில் 750 மீட்டர், இரண்டாவது பாதையில் 400 மீட்டர், மூன்றாவது பாதையில் 750 மீட்டர், நான்காவது பாதையில் 600 மீட்டர் நீளத்திற்கு 52 இன்ச் சுற்றளவு கொண்ட புதிய ரயில்வே தண்டவாளங்கள் அமைக்கப்படுகின்றன.
இந்த பணியால் ரயில் சேவைகள் பாதிக்கப்படாமல் இருக்க, ரயில் நிலையத்திற்கு ரயில்கள் வராத நேரத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


