புதுச்சேரி : புதுச்சேரி பல்கலைக்கழக வேந்தராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி பல்கலைக்கழகம் மத்திய பல்கலைகழகங்களில் ஒன்றாகும். கடந்த 1985ல் நிறுவப்பட்ட இப்பல்கலையின் கீழ் 59 கல்லுாரிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதன் கிளைகள் புதுச்சேரி, காரைக்கால், அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளில் உள்ளது. இது 13 இயற்புலன்களை உடையது. இப்பல்கலையின்வேந்தராக துணை ஜனாதிபதியும், நிர்வாக பணிகளை துணை வேந்தர் கவனித்து வருகின்றனர்.
அதனடிப்படையில் புதுச்சேரி பல்கலையின் வேந்தராக துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


