வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் 
திருவனந்தபுரம்: கேரளா அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. புதிதாக இரு அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
கேரளாவில் கம்யூ., தலைமையில் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக பினராயி விஜயன் உள்ளார். இவரது அமைச்சரவையில் கூட்டணி கட்சியான ஜனநாயக கேரள காங்., கட்சியை சேர்ந்த அந்தோணி ராஜூ, இந்திய தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த அகமது ஆகியோர் ராஜினாமா செய்தனர்.
இதையடுத்து காங்கிரஸ் (எஸ்) கட்சியின் ராமச்சந்திர கனடபள்ளி, காங்கிரஸ் (பி) கட்சியைச் சேர்ந்த கணேஷ் குமார் ஆகிய இருவரும் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். இன்று நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆரிப் முகம்மதுகான் இருவருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


