Thursday, November 12, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

எனது தலைக்கு ரூ1 கோடி அறிவித்துள்ளனர்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 28, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
எனது தலைக்கு ரூ1 கோடி அறிவித்துள்ளனர்..!
42
SHARES
67
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

திருமலை: எனது தலைக்கு ₹1 கோடி அறிவித்த தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா புகார் மனு அளித்தார். ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ராஜசேகர் மறைவுக்கு பிறகு அவரது மகன் ஜெகன்மோகன் பாத யாத்திரை மேற்கொண்டு எதிர்க்கட்சி தலைவராக இருந்தது குறித்தும் அதற்கடுத்து மாநிலத்தில் ஆட்சியை பிடித்து முதல்வராக நிர்வகித்து வருவது குறித்தும் ‘வியூகம்’ என்ற பெயரில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம்கோபால் வர்மா திரைப்படம் தயாரித்துள்ளார். இதில் முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு, பவன் கல்யாண் ஆகியோர் கதாபாத்திரமும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் தேர்தலை மையமாக கொண்டு ஜெகன்மோகன் மீது அனுதாபத்தை ஏற்படுத்தும் வகையில் சந்திரபாபுவையும், பவன்கல்யாணையும் வில்லனாக சித்தரித்து சினிமா எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகி கோலிகிபுடி னிவாஸ் என்பவர் பேசுகையில், ‘ராம்கோபால் வர்மா தலையை துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு ₹1 கோடி பரிசு தருகிறேன்’ என அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் இயக்குனர் ராம்கோபால்வர்மா அலுவலகம் முன்பு அவரது படத்தை தீயிட்டு கொளுத்தி சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில டிஜிபி ராஜேந்திரனிடம் திரைப்பட இயக்குனர் ராம்கோபால்வர்மா மற்றும் தயாரிப்பாளர் தாசரிகிரண்குமார் ஆகியோர் நேற்று அளித்த மனுவில், எனது தலைக்கு ₹1 கோடி அறிவித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Previous Post

வீடியோ : கேப்டனுக்காக சேர்ந்த கூட்டம், கோயம்பேட்டில் போக்குவரத்து மாற்றம்..!

Next Post

அமெரிக்காவில் கோர விபத்து: இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் பலி

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அமெரிக்காவில் கோர விபத்து: இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் பலி

அமெரிக்காவில் கோர விபத்து: இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் பலி

Comments 1

  1. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    தலைக்கு ஒரு கோடி தருகிறேன் அம்பது லட்சம் தருகிறேன் என்று அறிவித்த பல சம்பவங்கள் உள்ளன உண்மையிலேயே தலையை கொண்டு போய் கொடுத்தால் ஒரு பயலும் பனம் தர மாட்டான் சும்மா வெத்து பேச்சு பேசுவார்கள் தலையை கொண்டு போவோருக்கு கொலை கேஸ் தான் கிடைக்குமே தவிர பரிசு கிடைக்காது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In