புதுடில்லி: திரிணமுல் காங்., எம்.பி., கல்யாண் பானர்ஜி மீண்டும் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரை போல ‘மிமிக்ரி’ செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. ‘இது ஒரு கலை, ஆயிரம் முறை கூட மிமிக்ரி செய்வேன்’ என கல்யாண் பானர்ஜி தெரிவித்துள்ளார்.
பார்லி., வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் போராட்டத்தின் போது, திரிணமுல் காங்கிரசின் எம்.பி கல்யாண் பானர்ஜி, ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அவை நடவடிக்கையின் போது செய்வதை போன்று நகைச்சுவையாக அனைவரின் முன்னிலையில் செய்து காட்டினார். கல்யாண் பானர்ஜியின் இந்தச் செயலை ஆளும் கட்சியினர் கடுமையாக விமர்சித்தனர்.
மீண்டும் சர்ச்சை
தற்போது திரிணமுல் காங்., எம்.பி., கல்யாண் பானர்ஜி மீண்டும் ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கரை போல ‘மிமிக்ரி’ செய்தது அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், ‛‛நான் மிமிக்ரி செய்து கொண்டே இருப்பேன். இது ஒரு கலை. தேவைப்பட்டால் ஆயிரம் முறை செய்வேன். எனது கருத்தை தெரிவிக்க எனக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் உள்ளன. நீங்கள் என்னை சிறையில் அடைத்தாலும் நான் பின்வாங்க மாட்டேன்” என கல்யாண் பானர்ஜி பேசினார்.
பா.ஜ., கடும் கண்டனம்
இது குறித்து பா.ஜ., செய்தி தொடர்பாளர் ஷேசாத் பூனவல்லா கூறியிருப்பதாவது: கல்யாண் பானர்ஜி, ஜக்தீப் தன்கரை ‘மிமிக்ரி’ செய்தது அவரது உரிமை என்று கூறுகிறார். துணை ஜனாதிபதி தனது தாயிடம் சிறு குழந்தை போல் குறை கூறக்கூடாது என்றும் அவர் கூறுகிறார். இண்டியா கூட்டணியினர், ராகுல் ஆகியோர் கல்யாண் பானர்ஜியை தைரியப்படுத்துகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


