“சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையத்தை மூடிவிடலாம். அது தேவையில்லை. பரவலாக மழை, கனமழை என்பதெல்லாம் நீங்கள் சொல்லிதான் எங்களுக்கு தெரியுமா? எதற்காக தொழில்நுட்பம் வைத்துள்ளீர்கள்? சுதந்திரத்திற்கு முன்பு என்ன நிலையோ அதே நிலைதான் இப்போதும் நீடிக்கிறது. என்று அன்புமணி ராமதாஸ் காட்டமாக கூறினார்.
சென்னை வானிலை ஆய்வு மையம் அதிநவீனமானது. தென்மாவட்ட அதிகனமழையை துல்லியமாக கணித்துச் சொன்னது என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

