மிகவும் சர்ச்சைக்குரிய தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், சேவை நிபந்தனைகள் மற்றும் பதவிக் காலம்) மசோதா, 2023, மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய சட்டத்தின் படி மத்திய அரசு தன்னிச்சையாக தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை நியமிக்கலாம். இந்த சட்டம் பற்றி உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நரிமன் கருத்து தெரிவித்துள்ளார்.
“நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறிய சட்ட மசோதாவின் படி, தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டால், சுதந்திர, நியாயமான தேர்தல்கள் கற்பனையாக மாறும்” என்று உச்ச நீதிமன்ற மேனாள் நீதிபதி ரோஹிண்டன் ஃபாலி நரிமன் கூறியுள்ளார்.

