ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டின் கௌரவத்தை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அரசு தனக்கு வழங்கிய பத்ம ஸ்ரீ உள்ளிட்ட கௌரவங்களை பட்டங்களை திருப்பி அளிப்பதாக வேதனையுடன் அறிவிப்பு. மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம் பி யும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் இருந்த பிரிஜ் பூஷன் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்த நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததை அடுத்து என் சக வல்யுத்த வீராங்கனைகள் மரியாதை இன்றி வாழும் போது நான் மட்டும் அரசின் கௌரவத்தை ஏற்றுக் கொண்டு வாழ முடியாது எனக்கூறி முடிவு.
மல்யுத்த கூட்டமைப்பின் தேர்தலில் பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சிங்கின் ஆதரவாளர் சஞ்சய் சிங் வெற்றி பெற்ற நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தனக்கு அளிக்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிக்க உள்ளதாக மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தெரிவித்துள்ளார்.

