வாஸ்து சரியில்லை என்பதற்காக நாகர்கோயில் சட்டமன்ற உறுப்பினர் அந்த அலுவலகத்தை உபயோகப்படுத்தப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நாகர்கோயில் தொகுதியில் தற்போது திரு.M.R.காந்தி அவர்கள் MLA வாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக கட்சியை சார்ந்த இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது வழக்கம். தற்போதைய தென் மாநில வெள்ளத்தில் கூட அவருடைய பங்கு அவ்வளவாக இல்லை என்று அப்பகுதி மக்கள் கூறியதை காணமுடிந்தது.
வாகன எண் பலகையில் வாகன எண்ணுக்கு பதிலாக, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தியின் பேரன் என்ற வாசகத்தோடு வலம் வரும் இளைஞரின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கடந்த வருடம் வைரலாகியது. கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் அவர் என் பேரன் இல்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, ஆனாலும் அவர் தன் பேரன்களுடன் நின்றிருந்த போட்டோ வலைதளங்களில் உலாவியது.



