மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்த, Kuki இனத்தைச் சேர்ந்த 87 பேரின் உடல்கள் பல சிரமங்களுக்குப் பிறகு நேற்று அடக்கம் செய்யப்பட்டது.
கிட்டத்தட்ட 8 மாதங்களாக பிணவறைகளில் வைக்கப்பட்டு இருந்த 1 மாத குழந்தை உட்பட 87 பேரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன.
கடந்த ஆகஸ்ட் மாதத்திலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடக்கம் செய்ய முயற்சிக்கப்பட்ட நிலையில், Meitei மக்களின் எதிர்ப்பால் மத்திய உள்துறை அமைச்சகம் அடக்கம் செய்வதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


