ராஜபாளையம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரன் வழங்கினார்..
விருதுநகர் கிழக்கு மாவட்டம் ராஜபாளையம் கிழக்கு ஒன்றியம் சார்பாக ராஜபாளையம் அருகே உள்ள வாகைகுளம் பட்டி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்கே ரவிச்சந்திரன் வழங்கினார்.. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களிடம் மாவட்ட கழகச் செயலாளர் ரவிச்சந்திரன் குறைகளை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்..
இந்நிகழ்ச்சியில் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் குறிச்சியார்பட்டி மாரியப்பன், மணிகண்டன், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் சேகர் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


