இன்று காலை 11 மணியளவில் திருவொற்றியூர் அடுத்த எர்ணாவூர் முல்லை நகர் பகுதியில் எர்ணாவூர் காலனி பொதுமக்கள் எக்ஸாம் புயலின் காரணமாக சிபிசிஎல் நிறுவனம் கழிவு ஆயில்களை திறந்து காரணத்தினால் பகுதி மக்களின் வீடுகளில் மழை நீருடன் ஆயிலும் கலந்து வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் மின் சாதன பொருட்களும் மிகவும் மோசமானது. இதற்கு நிவாரணம் கோரி மாபெரும் சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதை அறிந்து காவல்துறை அதிகாரிகளும் சென்னை மாநகர அதிகாரிகளும் சட்டமன்ற உறுப்பினரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்து வீட்டிற்கு செல்லும்படி கூறினார்கள் இந்தப் பிரச்சனை இதனால் முடிவுக்கு வந்தது. ஆயினும் இப்பகுதியில் தினம்தோறும் இந்த CPCL பிரச்சனையால் போராட்டம் நடந்த வண்ணம் உள்ளது.
இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்கு வழி பிறக்குமா? பொறுத்திருந்து பார்போம்.




