அரியலூரில் இருந்து வந்த பக்தர்கள் திருசெந்தூர் கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் பாதையிலுள்ள ஸ்ரீவைகுண்டம் கோவிலுக்கு போகும் போது சுமார் 7 சிறுமிகள் உட்பட 60க்கும் மேற்பட்ட நபர்கள் வெள்ளத்தில் சிக்கி மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்து பசியோடு தவித்து வந்த நிலையில் தற்போது ஆர்மி, மற்றும் மீட்பு குழுவினர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்டு சென்று கொண்டு இருக்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு செய்தியாளர் ஜெகதேஸ்வரி அவர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தகவல் கொடுத்ததின் பெயரில் உடனே நடவடிக்கை எடுத்து மீட்டனர். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மகிழ்ச்சியோடு நன்றியை அம்மக்கள் தெரிவித்துக்கொண்டனர்..

