Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காங்கிரசுக்கு பணம் போட்டால் பாஜகவுக்கு செல்லும்..! – காங்கிரஸ் பெயரில் போலி நன்கொடைப் பக்கம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 19, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காங்கிரசுக்கு பணம் போட்டால் பாஜகவுக்கு செல்லும்..! – காங்கிரஸ் பெயரில் போலி நன்கொடைப் பக்கம்..
7
SHARES
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram
cong_donate

காங்கிரஸ் நன்கொடைப் பக்கத்தைப் போல போலியாக உருவாக்கப்பட்ட இணையதளப் பக்கங்கள் பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளுக்குச் செல்வதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்டு 138 ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில், அக்கட்சியால் நன்கொடைப் பக்கம் தொடங்கப்பட்ட நிலையில், அதுபோன்ற போலியான பக்கங்கள் உருவாக்கப்பட்டு அவை பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் பக்கங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒன்றே, ஆளும் மத்திய அரசின் அரசியல் போக்குகளை வெளிச்சம்போட்டு காட்டுவதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

காங்கிரஸின் ‘நாட்டுக்கு நன்கொடை’ திட்டத்தை அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். மேம்பட்ட இந்தியாவை உருவாக்க ‘நாட்டுக்கு நன்கொடை’ என்ற பெயரில் இணையவழியில் பொதுமக்களிடம் காங்கிரஸ் நிதி திரட்ட உள்ளது. இந்தத் திட்டத்தை தில்லியில் காங்கிரஸ் தலைவா் காா்கே திங்கள்கிழமை தொடங்கிவைத்து ரூ.1.38 லட்சம் நன்கொடை வழங்கினாா்.

இந்த திட்டத்தின் கீழ் நாட்டு மக்கள் தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக அளிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக காங்கிரஸ் கட்சி donateinc.in மற்றும் donateinc.net என்ற இணையதள முகவரிகளை உருவாக்கியுள்ளது.

ஆனால், சமூக வலைத்தளத்தில், அடையாளம் தெரியாத சிலர், Donatefordesh. in மற்றும் donatefordesh.org என்ற முகவரிகளை பகிர்ந்து வருகிறார்கள். இந்த லிங்குகளை கிளிக் செய்தால், அவை முறையே பாஜக மற்றும் ஓபிஇந்தியா இணையதளப் பக்கங்களுக்குச் செல்கின்றன என்று காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

இந்த மோசடி குறித்து காங்கிரஸ் கட்சியினர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதாவது, காங்கிரஸின் 138 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நன்கொடை பக்கங்கள் தொடங்கப்பட்டன. ஆனால், போலியாக பெயரிடப்பட்ட இணையதளங்கள், பாஜகவின் நன்கொடைப் பக்கத்திற்கும், இந்துத்துவா இணையதள அமைப்பின் பயனர்களுக்கும் திருப்பிவிடப்பட்டுள்ளன.எனவே விழிப்புணர்வுடன் செயல்படுமாறு காங்கிரஸ் தொண்டர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.

.

Previous Post

மலேசியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Next Post

ஸ்ரீவைகுண்டம் பகுதி கோவிலில் 60 நபர்கள் சிக்கி தவிப்பு – தூத்துக்குடி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்ரீவைகுண்டம் பகுதி கோவிலில் 60 நபர்கள் சிக்கி தவிப்பு – தூத்துக்குடி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.

ஸ்ரீவைகுண்டம் பகுதி கோவிலில் 60 நபர்கள் சிக்கி தவிப்பு - தூத்துக்குடி ஆட்சியர் அதிரடி நடவடிக்கை.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In