Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

மலேசியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 19, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மலேசியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு
11
SHARES
17
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த டிச.,16 வரையிலான ஒரு வார காலத்தில் 20,696 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் இருந்த 28 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, வைரஸ் பரவலை தடுக்க, முக கவசம், கை கழுவுதல், கூட்டமாக உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றும்படி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சீனாவில் கடந்த 2019ல் கோவிட் வைரஸ் பரவ துவங்கி மக்களை பாடாய் படுத்தி வந்தது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது. பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கோவிட் தடுப்பூசி உள்ளிட்டவற்றால் அந்த வைரஸ் பரவல் குறைந்தது.

தற்போது, மலேசியாவில் கோவிட் பரவல் அதிகரித்துள்ளது. கடந்த டிச.,16 அன்றுடன் முடிந்த ஒரு வார காலத்தில் 20,696 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 151 பேருக்கு மட்டும் தீவிர சிகிச்சை தேவைப்பட்டது. 91 பேருக்கு ஆக்ஸிஜன் உதவி தேவைப்பட்டது. 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் இருந்த 28 பேர் உயிரிழந்தனர்.

கோவிட் தொற்று பரவலை தடுக்க அந்நாட்டு சுகாதார அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்கள் பின்வருமாறு:

* இருமல், சளி உள்ளிட்டவை இருந்தால் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும்.

* சோதனையில் கோவிட் தொற்று உறுதியானால் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

* நோய் பரவல் தடுக்க முக கவசம் (மாஸ்க்) அணிய வேண்டும்.

* சானிட்டைசரை பயன்படுத்தி அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

* கோவிட் தொற்று உறுதியானவர்கள் 5 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்வதை சுகாதாரத்துறை கண்காணிக்க வேண்டும்.

* பொது இடங்களில் மாஸ்க் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

* நெரிசலான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

* சமூக இடை வெளியை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

.

Previous Post

உலக வரலாற்றிலேயே முதல்முறையாக இக்கூட்டத்தொடரில் மட்டும் மொத்தம் 92 எம்.பி.க்கள் இடைநீக்கம்..!

Next Post

காங்கிரசுக்கு பணம் போட்டால் பாஜகவுக்கு செல்லும்..! – காங்கிரஸ் பெயரில் போலி நன்கொடைப் பக்கம்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
காங்கிரசுக்கு பணம் போட்டால் பாஜகவுக்கு செல்லும்..! – காங்கிரஸ் பெயரில் போலி நன்கொடைப் பக்கம்..

காங்கிரசுக்கு பணம் போட்டால் பாஜகவுக்கு செல்லும்..! - காங்கிரஸ் பெயரில் போலி நன்கொடைப் பக்கம்..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In