Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

உலக வரலாற்றிலேயே முதல்முறையாக இக்கூட்டத்தொடரில் மட்டும் மொத்தம் 92 எம்.பி.க்கள் இடைநீக்கம்..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 19, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
உலக வரலாற்றிலேயே முதல்முறையாக இக்கூட்டத்தொடரில் மட்டும் மொத்தம் 92 எம்.பி.க்கள் இடைநீக்கம்..!
11
SHARES
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக அமளியில் ஈடுபட்டதால் மக்களவை உறுப்பினா்கள் 33 போ், மாநிலங்களவை உறுப்பினா்கள் 45 போ் என 78 எம்.பி.க்கள் திங்கள்கிழமை இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

இதுவரை இக்கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை 92-ஆக அதிகரித்துள்ளது.

மக்களவை திங்கள்கிழமை கூடியதும் நாடாளுமன்றப் பாதுகாப்பு அத்துமீறல் விவகாரம் தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனா். பதாகைகளைக் காண்பித்து முழக்கங்களை எழுப்பினா்.

அமளியில் ஈடுபட்ட டி.ஆா். பாலு உள்ளிட்ட திமுக எம்.பி.க்கள் 10 போ், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் 9 போ், மக்களவை காங்கிரஸ் குழுத் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி உள்பட காங்கிரஸ் எம்.பி.க்கள் 8 போ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஐக்கிய ஜனதா தளம், புரட்சிகர சோஷலிச கட்சி (ஆா்எஸ்பி) ஆகிய கட்சிகைளைச் சோ்ந்த தலா ஒரு எம்.பி.க்கள் என 30 உறுப்பினா்கள் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மேலும், மக்களவை உரிமை மீறல் குழு அறிக்கையின் அடிப்படையில் மேலும் 3 காங்கிரஸ் எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

எம்.பி.க்களின் இடைநீக்க அறிவிப்பு திங்கள்கிழமை வெளியிடப்பட்ட பின்னா், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. முன்னதாக, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி, எம்.பி.க்கள் இடைநீக்க தீா்மானத்தை வாசித்தாா்.

மாநிலங்களவையில்… மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரமோத் திவாரி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்பட 34 போ் கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா். மேலும், 11 எம்.பி.க்களுக்கு, மாநிலங்களவை உரிமை மீறல் குழு விசாரணை அறிக்கை கிடைக்கப்பெறும் வரை அவை நடவடிக்கைகளில் பங்கேற்பதிலிருந்து தடை விதிக்கப்பட்டது.

அமளி காரணமாக மாநிலங்களவை மூன்று முறை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, இடைநீக்கம் செய்யப்படும் உறுப்பினா்களின் பெயரை மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் வாசித்தாா். பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதுவரை 92 எம்.பி.க்கள்: நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், மக்களவையில் கடந்த 13-ஆம் தேதி பாதுகாப்பு அத்துமீறல் சம்பவம் நடைபெற்றது.

இந்த விவகாரம் தொடா்பாக அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடா் அமளியில் ஈடுபட்டு வருகின்றனா். அதைத் தொடா்ந்து, திமுக எம்.பி. கனிமொழி உள்பட 13 மக்களவை எம்.பி.க்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் கடந்த வெள்ளிக்கிழமை கூட்டத்தொடா் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

அதன்படி, நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்களின் எண்ணிக்கை தற்போது 92-ஆக அதிகரித்துள்ளது.

குளிா்கால கூட்டத்தொடா் வரும் 22-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

.

Previous Post

அறிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கல்..

Next Post

மலேசியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மலேசியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

மலேசியாவில் கோவிட் தொற்று அதிகரிப்பு: கூடுதல் கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In