காரைக்கால்: காரைக்காலில் மீனவ கிராமங்களில் அரியவகை ‘ப்ளூ டிராகன்’ வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின.
காரைக்கால் மாவட்டத்தில் கடல் வழக்கத்துக்கு மாறாக சீற்றத்துடன் காணப்பட்டு வருகிறது. மேலும் பருவநிலை மாற்றம் காரணமாக, காரைக்கால் கடற்கரையோர கிராமங்களில் ஆமைகள், ஜல்லிகள் உள்ளிட்ட பல்வேறு மீன்கள் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. மேலும் அரியவகை ‘ப்ளூ டிராகன் வகை மீன்கள் நேற்று மாலை பல்வேறு மீனவ கிராமங்களில் இறந்து கரை ஒதுங்கியது. இதுகுறித்து கடலோர போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

