Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம்(24 காரட்) விற்பனை இன்று முதல் தொடக்கம்..

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம்(24 காரட்) விற்பனை இன்று முதல் தொடக்கம்..
37
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சேலம்: தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் என சேலம் கிழக்கு தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். சேலம் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தங்கப்பத்திரங்களை தபால் அலுவலங்களில் வாங்கி கொள்ள முடியும்

தபால் அலுவலகங்களில் தங்கப்பத்திரம் திட்டத்தின் கீழ், யார் வேண்டுமானாலும் தங்கப் பத்திரத் திட்டத்தில் முதலீடு செய்ய முயும். இதற்கான வெளியீட்டு விலையை ஒரு கிராமுக்கு ரூ.6,199 என ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது. ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ள முடியும்.

Sale of Sovereign Gold bonds at Post Offices Begins Today: What Are the Benefits of Gold bonds?

இந்தத் திட்டத்தின் கீழ் ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், தபால் நிலையங்கள், அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள், என்எஸ்இ மற்றும் பிஎஸ்இ ஆகியவற்றில் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும்.

சேலம் கிழக்கு தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: “தங்கப்பத்திரம் சேமிப்பு திட்டம் நிதி ஆண்டு 2023-2024 பரிவர்த்தனையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இந்த பரிவர்த்தனையில் ஒரு கிராம் தங்கப்பத்திரம் ரூ.6 ஆயிரத்து 199-க்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்று முதல் 22-ந் தேதி வரை 5 நாட்களுக்கு மட்டும் சேலம் தலைமை தபால் அலுவலகம், ஆத்தூர் தலைமை தபால் அலுவலகம், அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, சேலம் தெற்கு, அம்மாபேட்டை, அழகாபுரம், பேர்லேண்ட்ஸ், கொண்டலாம்பட்டி, கெங்கவல்லி, பேளூர், ஆட்டையாம்பட்டி, வீரபாண்டி, தம்மம்பட்டி, வாழப்பாடி, தலைவாசல், மல்லூர், ஏற்காடு உள்ளிட்ட அனைத்து துணை தபால் அலுவலகத்திலும் தங்கப்பத்திரம் பெற்றுக் கொள்ளலாம்.

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரம் தனிநபர் ஒருவர் ஒரு நிதி ஆண்டில் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கபத்திரமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த சேமிப்பு திட்டத்தில் முதலீடு காலம் 8 வருடம். தேவைப்படின் 5 வருடங்களில் விலக்கி கொள்ளும் வசதியும் உள்ளது. ஆண்டுக்கு 2.5 சதவீதம் வட்டி 6 மாதத்துக்கு ஒருமுறை பெற்றுக் கொள்ளலாம். முதிர்வு தொகை 24 கேரட் தங்கத்துக்கு ஈடாக அப்போதைய தங்கத்தின் மதிப்புக்கு பெற்றுக் கொள்ளலாம்.

தங்கப்பத்திரம் சேமிப்பு திட்டம் தொடர்பாக உதவிக்கு கீழ்க்கண்ட தபால் வணிக உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம். முதலீடு செய்ய மிகவும் திட்டமாக நிதி வல்லுனர்களால் கணிக்கப்பட்டுள்ள தங்கப்பதிரம் சேமிப்பு திட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து பயன் பெறலாம்.” இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Previous Post

“தென்மாவட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண உதவிகளை வழங்குக” – இபிஎஸ் அறிக்கை.

Next Post

அதிர்ச்சி வீடியோ..! – சிறுமி கார் ஏற்றி நசுக்கி கொலை..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
அதிர்ச்சி வீடியோ..! – சிறுமி கார் ஏற்றி நசுக்கி கொலை..!

அதிர்ச்சி வீடியோ..! - சிறுமி கார் ஏற்றி நசுக்கி கொலை..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In