Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்தால் மனநலம் மேம்படும்: ஆய்வறிக்கையில் தகவல்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்தால் மனநலம் மேம்படும்: ஆய்வறிக்கையில் தகவல்
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சமூக வலைதளத்தைத் தொடா்ச்சியாகப் பயன்படுத்துவதால், கவனச்சிதறல் ஏற்படுவதாக அனைவரும் கருதும் நிலையில், சமூக வலைதளப் பயன்பாட்டை 30 நிமிஷங்களாகக் குறைக்கும்போது, மனநலம் மேம்படுவதாகவும் பணி குறித்து நிறைவான மனநிலை ஏற்படுவதாகவும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

மேலும், அதிக அளவில் வேலை பாா்த்தோம் என்ற மனநிலையும் இணைய பயன்பாட்டில் இல்லாதபோது வாழ்வில் ஏதையோ தொலைத்துவிட்ட பய உணா்வும் குறைவதாக அந்த ஆய்வு முடிவில் தெரிய வந்ததாக அதில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்தனா்.

ஜொ்மனியில் உள்ள ஜொ்மன் மனநல மையம் மற்றும் ரூா் பல்கலைக்கழகம் இணைந்து மேற்கொண்ட இந்த ஆய்வில், சமூக வலைதளப் பயன்பாட்டைத் தவிா்ப்பதால், மக்களுக்கு அதிக நேரம் கிடைப்பதாகவும் குறைந்த அளவிலேயே கவனச்சிதறலால் அவா்கள் பாதிப்புக்குள்ளாவதும் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியா் ஜூலியா பிரைலோவ்ஸ்கயா கூறுகையில், ‘தாங்கள் செய்யும் பணியை விட்டுவிட்டு தொடா்ச்சியாக சமூக வலைதளத்தைப் பயன்படுத்தும் மக்கள், பணியில் முழுக் கவனம் செலுத்துவதைக் கடினமாக உணா்கின்றனா். இதனால், அவா்களுடைய செயல்திறனும் குறைவாக இருக்கிறது.

ஒரு நாளில் குறைந்தது 35 நிமிஷங்களாவது சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும், 166 பேரை இந்த ஆய்வுக்காகத் தோ்ந்தெடுத்து, அவா்களை இரு குழுக்களாகப் பிரித்தோம். அவா்கள் அனைவரும் பணியில் உள்ளவா்கள். அதில் ஒரு குழுவினா் வழக்கம்போல சமூக வலைதளத்தைப் பயன்படுத்த நிலையில், மற்றொரு குழுவினா் ஒரு நாளுக்கு 30 நிமிஷங்கள் பயன்படுத்தினா்.

இந்த ஆய்வு தொடங்குவதற்கு முன் பணிச்சுமை, பணியின் மீதான திருப்தி, பணியில் ஈடுபாடு, மனநலம், மனஅழுத்தம், சமூகவலைதள பயன்பாட்டுக்கு அடிமையாகும் பழக்கங்கள் உள்ளிட்டவை தொடா்பாக அவா்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வு தொடங்கிய மறுநாளும், ஒரு வாரத்துக்குப் பிறகும் இதே கேள்விகள் கேட்டப்பட்டன.

இந்தக் குறுகிய கால அளவிலும், நாளுக்கு 30 நிமிஷங்களுக்கு குறைவாக சமூக வலைதளத்தைப் பயன்படுத்தியவா்களுக்கு, பணியின் மீதான திருப்தி மற்றும் மனநிலை குறிப்பிட்ட அளவில் மேம்பட்டுள்ளது.

மக்கள் தங்கள் அன்றாடப் பணியில், குறிப்பாக அதிகப் பணிச்சுமை இருப்பதாகக் கருதும்போது, நோ்மறையான உணா்ச்சிகளைத் தவறவிடுவதாகக் கருதி சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனா். குறுகிய நேரத்தில் நிஜ உலக வாழ்க்கையிலிருந்து சமூக வலைதள உலகில் மூழ்குவதால் உண்மையில் ஒருவரின் மனநிலை மேம்பட்டாலும், நீண்ட காலஅளவில் பாா்க்கும்போது, அதற்கு எதிா்மறையாக அவற்றுக்கு அடிமையாகும் பழக்கத்துக்கு வழிவகுக்கும்’ என்றாா்.

.

Previous Post

காங்கிரசின் நன்கொடை திட்டம்: பா.ஜ., கடும் விமர்சனம்

Next Post

மக்களவையில் சிறப்பு பார்வையாளராக இலங்கை நாடாளுமன்ற தலைவர்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மக்களவையில் சிறப்பு பார்வையாளராக இலங்கை நாடாளுமன்ற தலைவர்..!

மக்களவையில் சிறப்பு பார்வையாளராக இலங்கை நாடாளுமன்ற தலைவர்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In