Sunday, November 8, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home அரசியல் செய்திகள்

காங்கிரசின் நன்கொடை திட்டம்: பா.ஜ., கடும் விமர்சனம்

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 18, 2023
in அரசியல் செய்திகள், Default, சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
காங்கிரசின் நன்கொடை திட்டம்: பா.ஜ., கடும் விமர்சனம்
10
SHARES
16
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதுடில்லி: காங்கிரசின், ‘நாட்டுக்காக நன்கொடை’ என்ற திட்டத்தை பா.ஜ., விமர்சித்துள்ளது.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடக்க உள்ள லோக்சபா தேர்தலுக்கு தயாராகும் வகையில், நிதி திரட்டும் பணியில், காங்., ஈடுபட்டுள்ளது. இதற்காக, ‘நாட்டுக்காக நன்கொடை’ என்ற இயக்கத்தை, இன்று முதல் அக்கட்சி துவக்கி உள்ளது. இதன்படி வீடு வீடாக சென்று நிதி திரட்ட, காங்., நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரசின் இந்த திட்டத்தை, பா.ஜ., விமர்சனம் செய்துள்ளது. இது தொடர்பாக, ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில், 1984ல் வெளியான இன்குலாப் படத்தில், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நடிகர் காதர் கான் ஆகியோர் பேசும் காட்சிகளை, அக்கட்சி வெளியிட்டுள்ளது.

இந்த காட்சியில், கறுப்புப் பணத்தை பயன்படுத்தி ஓட்டுகளை வாங்குவதும், அந்த பணத்தை நலம் விரும்பிகள் நன்கொடையாக வழங்குவதும் போன்ற வசனங்கள் இடம் பெற்றிருக்கும்.

இந்த வீடியோவுடன், பா.ஜ., வெளியிட்ட பதிவில், ‘இந்த வீடியோவில் உள்ள காட்சியும், கதாபாத்திரங்களும் கற்பனை அல்ல. மக்களிடம் இருந்து நிதி திரட்ட அழைப்பு விடுத்த காங்., – எம்.பி., தீரஜ் சாஹுவின் அழைப்பை போல் உள்ளது’ என, குறிப்பிட்டுள்ளது.

ஜார்க்கண்ட் காங்., – எம்.பி., தீரஜ் சாஹுவின் வீடு மற்றும் அலுவலங்களில், சமீபத்தில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், 350 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவத்தை, இன்குலாப் பட காட்சியுடன் ஒப்பிட்டு, காங்கிரசின், ‘நாட்டுக்காக நன்கொடை’ இயக்கத்தை, பா.ஜ., விமர்சனம் செய்து உள்ளது.

.

Previous Post

அந்தமான், அஸ்ஸாமுக்கு விமான சுற்றுலா: ஐஆா்சிடிசி அறிவிப்பு

Next Post

சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்தால் மனநலம் மேம்படும்: ஆய்வறிக்கையில் தகவல்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்தால் மனநலம் மேம்படும்: ஆய்வறிக்கையில் தகவல்

சமூக வலைதளப் பயன்பாட்டை குறைத்தால் மனநலம் மேம்படும்: ஆய்வறிக்கையில் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In