திருவனந்தபுரம்: கேரளாவில், கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தொற்று பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் அரசு கட்டுப்பாடுகளை விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், மலேஷியா, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளன. அந்த வரிசையில், கேரளாவிலும் தொற்று பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33ல் இருந்து 768 ஆக உயர்ந்துள்ளது. ‘ஒமைக்ரான்’ வகை தொற்றின் உட்பிரிவான ஜெ.என்.1 வகை தொற்று பரவல் கண்டறியப்பட்டுள்ளது.
காய்ச்சல், இருமல், அசதி, மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலி ஆகியவை பொதுவான அறிகுறிகளான தென்படுகின்றன. இதன் தீவிரத்தன்மை குறித்து இப்போது எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மருத்துவ நிபுணர்கள் முடிவு செய்துள்ளனர்.
ஒருவேளை தொற்று பரவல் தீவிரமடைந்தால், அதிக பாதிப்புகள் உள்ள பகுதிகளில் கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


பக்கத்து மாநிலமான கேரளாவில் கொரோனா தொற்று அதிகரித்து இருப்பது மிகவும் வருத்தப்பட வேண்டியது கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் நபர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனை செய்ய வேண்டும்