குவைத் சிட்டி: எண்ணெய் வளம் மிக்க குவைத் நாட்டின் மன்னர் ஷேக் நவாப் அல் அஹமது அல் சபா காலமானார். அவரது வயது 86.
இந்த தகவலை அந்நாட்டு டிவிக்கள் செய்தி வெளியிட்டு உள்ளது. தொடர்ந்து டிவிக்களில், வழக்கமான நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
கடந்த நவம்பர் மாதம், உடல்நலக்குறைவு காரணமாக ஷேக் நவாப் அல் அஹமது அல் சபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்ட அந்நாட்டு செய்தி நிறுவனம், என்ன மாதிரியான உடல்நிலை பிரச்னை ஏற்பட்டது எனக்கூறவில்லை. பிறகு, அவரது உடல்நிலை சீராக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கடந்த 2006 ம் ஆண்டு ஷேக் நவாப் அல் அஹமது அல் சபா , பட்டத்து இளவரசராக மகுடம் சூட்டப்பட்டார். பிறகு 2020 செப்டம்பரில் குவைத் அமீர் ஆக மகுடம் சூட்டப்பட்டார்.


குவைத் அமீர் அவர்களின் இயற்கை எய்தலுக்கு எனது ஆழ்ந்த வருத்தங்கள்