Saturday, November 7, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாற்றம் கிடையாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பணியிட மாற்றம் கிடையாது: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
63
SHARES
101
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிட மாறுதல் கிடையாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு ஒரே இடத்தில் பணியாற்ற வேண்டும். அதேபோல வட மாவட்டங்களில் காலியாக உள்ள பணியிடங்களில், ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர். குறிப்பாக திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், காலி இடங்கள் அதிகமாக உள்ள நிலையில், அவை நிரப்பப்பட உள்ளன. 

இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன், பள்ளிக் கல்வி இயக்குநருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி உள்ளதாவது:

757 பட்டதாரி ஆசிரியர்‌ காலி பணியிடங்களை நேரடி நியமனம்‌ மூலம்‌ நிரப்பக் கோரப்பட்ட அனுமதி தற்போது வழங்கப்பட முடியாத சூழல் உள்ளது. 

ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை அமைப்பால்‌ அனுமதிக்கப்பட்ட அளவைவிட உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்களை, அதிகமாக காலியாக உள்ள மாவட்டங்களில்‌ 500க்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ எண்ணிக்கையுடைய பள்ளிகளுக்கு பணிநிரவல்‌ செய்யப்பட வேண்டும்‌. அவ்வாறு பணிநிரவல்‌ செய்யப்பட்ட விவரத்தை, பணிநிரவல்‌ முடிவுற்ற 15 தினங்களுக்குள்‌ அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்‌.

பிரதி ஆண்டு ஜூன்‌ 1ம்‌ தேதியன்று உள்ளவாறு ஆசிரியர்‌ பணியிடங்களைக் கணக்கில்‌ கொண்டு அதே ஆண்டு ஜூன்‌ 30-க்குள்‌ பணிநிரவலை முடித்து ஜூலை 1ஆம்‌ நாளன்று காலிப்பணியிட மதிப்பீட்டினை அரசு அனுமதிக்கு அனுப்ப வேண்டும்‌.

தற்போது பட்டதாரி ஆசிரியர்‌ 2000 பணியிடங்களை நிரப்பிக்‌ கொள்ள அனுமதிக்கப்பட்டதில்‌ தேர்வாகும்‌ தேர்வர்களை பட்டதாரி ஆசிரியர்‌ பணியிடங்கள்‌ அதிகமாக காலியாக உள்ள கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும்‌ தருமபுரி மாவட்டங்களில்‌ முன்னுரிமை அடிப்படையில்‌ நியமனம்‌ செய்யப்பட வேண்டும்‌.

முன்னுரிமை மாவட்டங்களில்‌ தேர்வர்களை முதலில்‌ நியமனம்‌ செய்யும்‌ போதே குறைந்தபட்சம்‌ 5 ஆண்டுகள்‌ இம்மாவட்டங்களில்‌ பணிபுரிய வேண்டும்‌ எனும்‌ நிபந்தனையை நியமன ஆணையில்‌ குறிப்பிட்டு நியமனம்‌
செய்யப்பட வேண்டும்‌.

இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை செயலாளர் தெரிவித்து உள்ளார். 

Previous Post

நாட்டிலேயே தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்த நிதியும் பெறாத கட்சி சிபிஐ(எம்)..!

Next Post

திராவிட மாடலையும் ஆன்மீகத்தையும் பிரிக்கவே முடியாது.. அமைச்சர் எ.வ.வேலு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திராவிட மாடலையும் ஆன்மீகத்தையும் பிரிக்கவே முடியாது.. அமைச்சர் எ.வ.வேலு

திராவிட மாடலையும் ஆன்மீகத்தையும் பிரிக்கவே முடியாது.. அமைச்சர் எ.வ.வேலு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In