திருத்தணி அருகே பள்ளி கட்டடம் திறந்த முதல் நாளே தரை உடைந்து கற்கள் பெயர்ந்து வந்ததால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு துவக்கப்பள்ளி 35 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இப்பள்ளி கட்டடம் பழுதடைந்ததால், 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், கட்டடம் திறக்கப்படாமல் இருந்த நிலையில், பள்ளி கட்டடத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்ததை அடுத்து, திருவாலங்காடு வட்டார கல்வி அலுவலர் முன்னிலையில் பள்ளிக் கட்டடம் திறக்கப்பட்டது.

அப்போது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளே சென்றதும் தரை உடைந்து கற்கள் பெயர்ந்தன. பள்ளிக் கட்டடம் தரமாக இல்லை என கடந்த மாதம் 20-ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும், அதிகாரிகள் பள்ளியை உரிய முறையில் ஆய்வு செய்யாமலேயே தரமாக உள்ளதாக சான்றளித்திருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மேலாண்மை குழு கோரிக்கை விடுத்துள்ளது.


மாவட்ட ஆட்சியர் ஒன்றுமே செய்யப் போவதில்லை அதாவது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார் அவரால் எடுக்கவும் இயலாது எனவே இந்த புகாரை லஞ்ச ஒழிப்புத் துறையின் இயக்குனருக்கு சென்னை ஆலந்தூரில் உள்ளது அலுவலகம் அந்த அலுவலகத்தின் முகவரிக்கு புகாராக அனுப்பினால் அந்த சம்பவத்துக்கு காரணமான நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பார்கள்