Thursday, November 5, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

லஞ்சம் வாங்கிய ED அதிகாரிக்கு சிறையில் கட்டில், மெத்தை, இறைச்சி வழங்க உத்தரவு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 16, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
2
லஞ்சம் வாங்கிய ED அதிகாரிக்கு சிறையில் கட்டில், மெத்தை, இறைச்சி வழங்க உத்தரவு..!
44
SHARES
71
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

அங்கித் திவாரி மீதான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் லஞ்சம் வாங்கியதாக, மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அன்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கடந்த 1ஆம் தேதி கைது செய்தனர்.

இந்தநிலையில், மதுரை மத்திய சிறையில் இருக்கும் அங்கித் திவாரிக்கு முதல் வகுப்பு கேட்டு அவரது தரப்பில் திண்டுக்கல் மாவட்ட முதன்மை நடுவர் நீதிமன்றத்தில் கடந்த 12ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி மோகனா முன்னிலையில் நேற்று (டிசம்பர் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செல்வம்,

”அவர் மத்திய அரசில் பணிபுரியும் அதிகாரி, முறையாக வருமான வரி தாக்கல் செய்பவர்” போன்ற காரணங்களை அடுக்கி அன்கித் திவாரிக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அரசு வழக்கறிஞர் அனுராதா, அவருக்கு முதல் வகுப்பு வழங்கவே கூடாது என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மோகனா, அங்கித் திவாரிக்கு சிறையில் முதல் வகுப்பு வழங்குமாறு உத்தரவிட்டார்.

இதனையடுத்து  மதுரை மத்திய சிறையில் இருக்கும் அங்கித் திவாரி இன்று முதல் வகுப்புக்கு மாற்றப்பட உள்ளார்.

அங்கு அவருக்கு வழக்கமான உணவுடன் கூடுதலாக சப்பாத்தி வழங்கப்படும். வாரத்தில் மூன்று நாட்கள் இறைச்சி வழங்கப்படும்.

தங்கும் அறையில் மின்விசிறி, கட்டில், மெத்தை, நாற்காலி, மேஜை, கொசுவலை, நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்ற வசதிகளையும் அங்கித் பெறுவார்.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு!

இதற்கிடையே நேற்று அங்கித் திவாரியின் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

மேலும், “அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்த தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையின் நடவடிக்கை சட்டரீதியானதுதான். லஞ்சம் வாங்கும் அமலாக்கத் துறை அதிகாரியை கைது செய்யவும், அவரிடம் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு முழு அதிகாரம் உண்டு என்றும் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அங்கித் திவாரி தரப்பு தயாராகி வருகிறது.

Previous Post

அதிமுகவில் போலி உறுப்பினர் அட்டைகள் வழங்கிய வழக்கு : EPS க்கு சம்மன்..!

Next Post

திறந்த முதல் நாளே பெயர்ந்து வந்த தரை… திருவள்ளூர் அரசுப் பள்ளியின் அவல நிலை!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திறந்த முதல் நாளே பெயர்ந்து வந்த தரை… திருவள்ளூர் அரசுப் பள்ளியின் அவல நிலை!

திறந்த முதல் நாளே பெயர்ந்து வந்த தரை... திருவள்ளூர் அரசுப் பள்ளியின் அவல நிலை!

Comments 2

  1. R.Sivasamy says:
    3 years ago

    உண்மையை தோலுரித்து உள்ளீர்கள், மக்கள் மற்றும் பொதுபணிகளில் ஈடுபட்டு உழைக்கும் உங்களுக்கு நன்றி.

    Reply
  2. ராஜலிங்கம் சென்னை says:
    3 years ago

    லஞ்சம் வாங்கும் மத்திய அரசு அதிகாரிகளை மாநில லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்யலாம் கைது செய்தது சரியான சட்ட நடவடிக்கையே என்று உயர் நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு மிகவும் சரியானது வரவேற்கப்பட வேண்டியது எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய து இந்த தீர்ப்பு. மற்றபடி முதல் வகுப்பு கொடுத்தது ஒன்றும் தவறில்லை . குற்றம் நிரூபிக்கப்படாதவரை எந்த ஒரு நபரும் குற்றவாளிகள் கிடையாது

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In