சென்னை: சென்னையில் புயல் பாதிப்பு காரணமாக தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன் மத்திய குழு ஆலோசனை நடத்தியது. வருவாய்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளில் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதங்களை பார்வையிடுவதற்காக, குணா சத்தியமூர்த்தி என்ற அதிகாரி தலைமையில், மத்திய குழு தமிழகம் வந்தது.
இந்தக் குழுவில் மத்திய வேளாண்மை, நெடுஞ்சாலை, நிதி, ஊரக வளர்ச்சி, மின் துறைகளைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர், வரும் டிச.,13ம் தேதி வரை வெள்ள சேதங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.
ஆலோசனை
சென்னையில் புயல் பாதிப்பு காரணமாக தலைமை செயலகத்தில் தலைமை செயலாளருடன் மத்திய குழு ஆலோசனை நடத்தியது. வருவாய்துறை, நிதித்துறை உள்ளிட்ட துறைகளில் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

