பெங்களூரு: சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளைஞரின் தலையை துளைத்துக் கொண்டு சென்ற 3 செ.மீ. அளவுள்ள தோட்டா அறுவைகிசிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர்.
29 வயதாகும் இளைஞர், தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக உள்ளார். காது கோளாதவர். இவரது மண்டை ஓட்டை துளைத்துக்கொண்டு சென்ற துப்பாக்கித் தோட்டாவால், இவர் கடுமையான தலைவலி மற்றும் காதிலிருந்து நீர் ஒழுகும் பிரச்னையால் அவதிப்பட்டுவந்துள்ளார்.
யேமனில் உள்ள ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்த இவர் தனது 6 சகோதரர்கள், 3 சகோதரிகளுடன் வசித்து வந்துள்ளார். பெற்றோர் விவசாயம் செய்து வந்துள்ளனர். ஒருநாள், அவர்கள் வாழ்ந்து வந்த பகுதியில் இரு தரப்பினருக்கு இடையே நடந்த சண்டையில் இவர் சிக்கிக் கொண்டார். எனது தலையில் துப்பாக்கிக் குண்டு துளைத்துவிட்டது. ரத்தம் கொட்டியது. உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்பட்டது. தலையில் சிக்கிய குண்டை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
அவரது தலைக்குள் காதுக்கு அருகே துளைத்திருந்த தோட்டாவின் முனை, மண்டை ஓட்டுக்குள் சிக்கியிருந்தது. இதனால், கடுமையான தலைவலியுடன் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.
18 ஆண்டு கால போராட்டம், பெங்களூருவில் இருக்கும் அவரது நண்பர்கள் மூலம் முடிவுக்கு வந்தது. இந்தியா வந்து, அவர் அறுவைசிகிச்சை செய்துகொண்டு துப்பாக்கித் தோட்டா தலையிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.


