இதற்கு அப்பாலும், ஜனநாயகம், புலம்பெயர்ந்தவர்களின் நலன், நட்பு, பொருளாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றாலும் நமது உறவு உறுதியாகியிருக்கிறது. இந்தியாவிற்கும், ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான உறவு இதற்கு அப்பாற்பட்டது என்று நான் நம்புகிறேன்.
இரு நாடுகளுக்குமிடையே பரஸ்பர நம்பிக்கை, மரியாதை இருக்கிறது. இது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் தூதரக உறவுகளால் மட்டுமே உருவாகவில்லை. இதற்கு உண்மையான காரணம், ஆஸ்திரேலியாவில் வாழும் இந்தியர்களாகிய நீங்கள் அனைவரும்தான்.
