Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

மகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 11, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
மகளை கொன்று கணவன் – மனைவி தற்கொலை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

கர்நாடகாவின் குடகு மாவட்டம் மடிகேரி அருகே, ககோட்லு என்ற கிராமம் உள்ளது. மலைகள் சூழ்ந்த இந்த பகுதியில் ஏராளமான சொகுசு விடுதிகள் உள்ளன. இங்குள்ள விடுதி ஒன்றில், கேரளாவின் கொல்லத்தைச் சேர்ந்த வினோத் பாபுசேனன், 43, என்பவர், மனைவி ஜி.பி.ஆப்ரஹாம், 38, மகள் ஜேன் மரியா ஜேக்கப், 11, ஆகியோருடன் கடந்த 8ம் தேதி மாலை 6:00 மணிக்கு அறை எடுத்து தங்கினர்.

அறைக்கு சென்று சிறிது நேரம் இருந்துவிட்டு பின் வெளியே காலாற நடக்கச் சென்றனர். அப்போது அருகே உள்ள கடைக்கு அவர்கள் சென்றதாக கூறப்படுகிறது. பின் விடுதிக்கு திரும்பிய அவர்கள், அங்கு இரவு உணவு சாப்பிட்டனர். அப்போது மூன்று பேரும் மகிழ்ச்சியாகவே இருந்ததாக கூறப்படுகிறது. மீண்டும் அறைக்கு செல்லும் போது காலையில் அறையை காலி செய்வதாக வினோத் பாபுசேனன் தெரிவித்துள்ளார்.

மறுநாள் காலை 10:00 மணி வரை அவர்கள் அறையைவிட்டு வெளியே வராததால், விடுதி பணியாளர் சென்று கதவை தட்டினார். அறை கதவு திறக்கப்படாததை அடுத்து, அவர் திரும்ப வந்துவிட்டார். அறையை காலி செய்ய வேண்டிய நேரம் வந்ததால், மீண்டும் சென்று தட்டியபோதும் கதவு திறக்கப்படவில்லை.

அறையின் கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்தபோது, கணவன் – மனைவி துாக்கில் தொங்கியபடி இருந்தனர். அருகே கட்டிலில் அவர்களது மகள் இறந்து கிடந்தார். போலீசார் வந்து உடல்களை கைப்பற்றினர்.அறையில், கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில், தான் கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவன் என்றும், வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்ததாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

தங்க நகை கொள்ளையில் ஏழு பேர் கைது

ஆந்திராவில் ஸ்டேட் வங்கி கிளையில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட, 4.7 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை மீட்ட போலீசார், அதற்கு காரணமான ஏழு பேரை நேற்று கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் வங்கி துணை மேலாளர் ஸ்வப்ன ப்ரியா, வங்கி காசாளர் முன்ஜி சுரேஷ் உட்பட ஒன்பது பேர் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. லாக்கரில் இருந்த நகைகளை திருடி, தன் சகோதரரிடம் ஸ்வப்ன ப்ரியா வழங்கியிருந்ததும் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவாக உள்ள காசாளர் முன்ஜி சுரேஷை தேடி வருகின்றனர்.

குழந்தையை கடத்த முயன்ற மூதாட்டி கைது

தென்காசி மாவட்டம், கடையம் அருகே முதலியார்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன். பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் இந்துசுபா, 4. குழந்தை நேற்று காலை வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது குழந்தையை திடீரென பர்தா அணிந்த ஒரு பெண் துாக்கிக் கொண்டு வேகமாக நடந்து சென்றார். குழந்தையின் பெரியப்பா சுடலைமுத்து பெண்ணின் எதிரே சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.

குழந்தையை பெண் ஒருவர் துாக்கி செல்வதை பார்த்து, அவரை மறித்து கேட்க முற்பட்டபோது, அந்த பெண் குழந்தையை கீழே இறக்கிவிட்டு வேகமாக ஓடியுள்ளார். அப்பகுதியில் இருந்தவர்கள் பெண்ணை சுற்றி வளைத்து பிடித்து, கடையம் போலீசிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், அவர் அஜினாபேகம், 58, என, தெரிய வந்தது. தன்னை பற்றிய விபரங்களை முன்னுக்கு பின் முரணாக கூறினார். போலீசார் பெண்ணை கைது செய்து தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

வி.ஏ.ஓ.,வுக்கு ‘பளார்’

ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தைச் சேர்ந்தவர் வீரபுத்திரன் 53. இவர் அருப்புக்கோட்டை அருகே செட்டிக்குறிச்சியில் வி.ஏ.ஓ., ஆக உள்ளார். நேற்று முன்தினம் மதியம் சின்ன செட்டி குறிச்சியைச் சேர்ந்த பால்ராஜ் கிராம கணக்கில் உள்ள யோகராணி பட்டாவிற்கு தன் பெயரில் அடங்கல் கேட்டுள்ளார்.

யோகராணி இறந்து விட்டதால் அவரது வாரிசுகள் சம்மதம் கொடுத்தால் மட்டுமே அடங்கல் தர இயலும் என வி.ஏ.ஓ., கூறியுள்ளார். இதனை ஏற்க மறுத்த பால்ராஜ் தகாத வார்த்தைகளால் திட்டி வி.ஏ.ஓ.,வை கன்னத்தில் அறைந்து பணி செய்ய விடாமல் தடுத்தார். வி.ஏ.ஓ., வீரபுத்திரன் புகாரில் பால்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மனைவி அடித்து கொலை; போதை கணவன் கைது

கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த வடகரை காலனியை சேர்ந்தவர் பழனிவேல், 45. இவரது மனைவி சரஸ்வதி, 40. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். குவைத் நாட்டில் வேலை செய்து வந்த பழனிவேல், இரு மாதங்களுக்கு முன் சொந்த ஊர் வந்தார். கணவன், மனைவிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

நேற்று முன்தினம் இரவு நடந்த தகராறில், ஆத்திரமடைந்த பழனிவேல், மனைவியை அடித்து கொலை செய்து, அதே பகுதி குளக்கரையில் உடலை வீசினார். இதற்கிடையே, நேற்று அதிகாலை, 1:00 மணிக்கு போலீசாரிடம் அவர் அளித்த புகாரில், ‘குளக்கரையில் சரஸ்வதி மூக்கு மற்றும் வாயில் ரத்தம் வடிந்த நிலையில் இறந்து கிடந்தார்’ என, தெரிவித்தார்.

பெண்ணாடம் போலீசார் உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பழனிவேல், மனைவியை கொலை செய்திருக்கலாம் என சந்தேகித்த போலீசார், அவரிடம் தீவிரமாக விசாரித்ததில், கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். போலீசார் பழனிவேலை கைது செய்தனர்.

கவர்ச்சி அறிவிப்பு செய்தவருக்கு ‘கம்பி’

திருச்சி மாவட்டம், வையம்பட்டி அருகே, நடுவப்பட்டியைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன், 47. இவர், திருச்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனம் துவங்க இருப்பதாக கூறி, கவர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார்.

மத்திய பஸ் ஸ்டாண்ட் அருகே ஒரு ேஹாட்டலில் தங்கியிருந்த அவரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், பொய் அறிவிப்புகளை வெளியிட்டு, பொதுமக்களிடம் பணத்தை மோசடி செய்ய முயன்றது தெரிந்தது.

அதையடுத்து, பொதுமக்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கோபாலகிருஷ்ணனை நேற்று பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

.

Previous Post

பாஜகவுக்கு வாக்களித்த இஸ்லாமிய பெண் மீது தாக்குதல்: முதல்வா் நேரில் ஆறுதல்

Next Post

ஸ்ரீ ராமா் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் 100 சிலைகள் அலங்கார ஊா்தியில் ஊா்வலம்

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
ஸ்ரீ ராமா் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் 100 சிலைகள் அலங்கார ஊா்தியில் ஊா்வலம்

ஸ்ரீ ராமா் வாழ்க்கையை காட்சிப்படுத்தும் 100 சிலைகள் அலங்கார ஊா்தியில் ஊா்வலம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In