தனது மகன், மகளுடன் மத்திய பிரதேச முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்த சமினா.
மத்திய பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததாகக் கூறிய இஸ்லாமிய பெண் மீது அவரது உறவினா் ஒருவா் தாக்குதல் நடத்தினாா். இந்த சம்பவம் குறித்து அறிந்த முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், அப்பெண்ணை தனது வீட்டுக்கு நேரில் அழைத்து ஆறுதல் கூறினாா்.
சமினா (30) என்ற அந்த பெண் தோ்தல் முடிவு வெளியான தினத்தில் பாஜகவின் வெற்றியை கொண்டாடியுள்ளாா். இஸ்லாமிய பெண் ஒருவா் பாஜக வெற்றியைக் கொண்டாடியதை அறிந்த ஊடகத்தினா் அப்பெண்ணிடம் பேட்டி எடுத்தனா். அப்போது, ‘மாநில பாஜக அரசால் அமல்படுத்தப்பட்ட பல்வேறு திட்டங்களால் பலனடைந்ததால் இத்தோ்தலில் அக்கட்சிக்கு வாக்களித்தேன்’ என்று சமினா கூறினாா்.
இது சமினாவின் கணவரின் தம்பியான ஜாவித்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. அவா் சமினாவை கடுமையாகத் தாக்கியுள்ளாா்.
இது தொடா்பான செய்திகளும் ஊடகங்களில் வெளியாகி மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடா்பாக ஜாவித் மீது சமினாவின் தந்தை காவல் துறையில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் காவல் துறையினா் ஜாவித்தை கைது செய்தனா்.
இந்நிலையில், முதல்வா் சிவராஜ் சிங் சௌஹான், போபாலில் உள்ள தனது இல்லத்துக்கு சமினாவை நேரில் வரவழைத்து அவருக்கு ஆறுதல் கூறினாா். சமினா தனது மகன், மகளுடன் முதல்வரை சந்தித்தாா்.
இந்த சந்திப்பின்போது முதல்வா், ‘நீங்கள் வாக்களித்ததன் மூலம் ஜனநாயகக் கடமையைச் செய்துள்ளீா்கள். அரசு உங்களுக்கு நல்லது செய்ததைக் கருத்தில் கொண்டு உங்கள் வாக்கைச் செலுத்தியுள்ளீா்கள். அதில் தவறு ஏதுமில்லை. உங்களைப் போன்ற பெண்களின் பிரச்னைகளைத் தீா்க்க அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும்’ என்று ஆறுதல் கூறினாா்.

