Wednesday, October 28, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home தமிழ்நாடு செய்திகள்

ஃபிசியோதெரபிஸ்ட்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஒன்பதரை மணிநேர வேலை நேரம்; வலுக்கும் எதிர்ப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
May 23, 2023
in தமிழ்நாடு செய்திகள்
0
ஃபிசியோதெரபிஸ்ட்களுக்கு அதிகரிக்கப்பட்ட ஒன்பதரை மணிநேர வேலை நேரம்; வலுக்கும் எதிர்ப்பு!
4
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சமீபத்தில் 12 மணி நேர வேலை மசோதாவை கொண்டு வந்த தமிழக அரசு, பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பால் அதை திரும்ப பெற்றுக் கொண்டது.

இந்த நிலையில், ‘அரசாணையை மீறி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஃபிசியோதெரபிஸ்ட்களுக்கான வேலை நேரத்தை அதிகாரிகள் திடீரென அதிகரித்துள்ளனர்’ என்று ஃபிசியோதெரபிஸ்ட்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

இது குறித்து நம்மிடம் பேசிய, இந்திய இயன்முறை மருத்துவர் சங்கத்தின் தமிழகத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார், “தமிழக அரசு மருத்துவமனைகளில் ஃபிசியோதெரபிஸ்ட்கள் சுமா‌ர் 600 பேர் காலமுறை ஊதியத்திலும் தொகுப்பூதியத்திலும் பணியாற்றி வருகின்றனர்.

வெ. கிருஷ்ணகுமார் | இந்திய இயன்முறை மருத்துவர் சங்கத்தின் தமிழகத் தலைவர்
முதன்முதலாக உடற்பயிற்சியைத் தொடங்குகிறீர்களா?- பிசியோதெரபிஸ்ட் வழிகாட்டல் #LifeStartsAt40 #நலம்நல்லது

பல ஆண்டுகளாக அவர்களது வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை இருந்து வந்தது. சமீபத்தில் மருத்துவப் பணிகள் இயக்கக உயர் அதிகாரிகள் சிலர், மாவட்டம் ஒன்றில் ஆய்வுக்குச் சென்றபோது அங்கிருந்த ஃபிசியோதெரபிஸ்ட்களிடம் பணி நேரம் குறித்து விசாரித்தபோது, 2013 அரசாணை அடிப்படையில் தங்களது பணி நேரத்தை பின்பற்றுவதாகவும், இரண்டுக்கும் மேற்பட்ட ஃபிசியோதெரபிஸ்ட்கள் உள்ள இடங்களில் அரசாணைப்படி மாலை நேரப் பணியை சுழற்சி முறையில் பின்பற்றுவதாகவும் கூறியுள்ளனர்.

அரசாணை அடிப்படையில் கொடுத்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளாமல் அவர்களை எச்சரித்ததோடு, எதிர்த்துப் பேசுவதாக நினைத்து பழி வாங்கும் வகையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஃபிசியோதெரபிஸ்ட்களின் வேலை நேரத்தை முதலில் அதிகரித்ததோடு, அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அனைத்து ஃபிசியோதெரபிஸ்ட்களுக்கும் உச்சபட்சமாக வேலைநேரத்தை அதிகரித்து புதிய சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்கள்.

இதனால் காலை 7.30 மணி முதல், மாலை 5 மணி வரை என மொத்தம் 9.30 மணி நேரம், வாரத்திற்கு 6 நாள்களும் வேலை செய்ய வேண்டும் என, வேறு எந்த அரசு பணியாளர்களுக்கும் இல்லாத நீட்டிக்கப்பட்ட பணி நேரம் ஃபிசியோதெரபிஸ்ட்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது மனவேதனையை ஏற்படுத்துகிறது.

ஃபிசியோதெரபி
மருந்தில்லா மருத்துவத்தின் மகிமை பிசியோதெரபி!

இது இப்படியே சென்றால் விரைவில் மற்ற அரசு ஊழியர்களுக்கும் 10 மணி நேரப் பணி அதிகாரிகளால் நிர்பந்திக்கப்படும். அரசு ஆணையில் ஃபிசியோதெரபிஸ்ட்கள் வேலை நேரம் காலை 7.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை என்றுதான் இதுவரை இருந்து வருகிறது.

மக்களுக்கு ஃபிசியோதெரபி சேவையை வழங்க, இந்த நேர அதிகரிப்பு பயன்பட்டால் எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால், இது வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாக மட்டும் எடுக்கப்பட்டுள்ளது.

தினசரி அரசு மருத்துவமனையில் ஃபிசியோதெரபிஸ்ட் ஒருவர் 30 முதல் 50 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது பெருமளவு உடல் உழைப்பை ஃபிசியோதெரபிஸ்ட் தர வேண்டி இருக்கும். 80 சதவிகித அரசு மருத்துவமனைகளில் ஒரே ஒரு ஃபிசியோதெரபிஸ்ட் மட்டுமே இருப்பார். உடல் உழைப்பை அதிகம் தருகிறார்கள் என்பதை மனதில் கொண்டுதான் அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர், சிறப்புப்படி வழங்க உத்தரவிட்டு அதன்படி வழங்கப்பட்டு வருகிறது.

ஃபிசியோதெரபி | மாதிரிப்படம்
அரசு மருத்துவமனை ஃபிசியோதெரபிஸ்ட் பணிக்கு தகுதி டிகிரியா, டிப்ளோமாவா? – புது சர்ச்சை

இதை எதையும் கருத்தில் கொள்ளாமல் தனிப்பட்ட கோபத்தை மனதில் வைத்து பழிவாங்கும் நடவடிக்கையாக உச்சபட்ச வேலை நேரம் நிர்ணயித்துள்ளது கண்டிக்கத்தக்கது.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஃபிசியோதெரபிஸ்ட் பணியிடங்களை அதிகரியுங்கள் என நீண்ட நாள்களாக கோரிக்கை வைப்பதோடு பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம். ஆனால் இப்போது தன்னிச்சையாக வேலை நேரத்தை அதிகரித்து இருப்பதை மாநில மருத்துவ பணிகள் இயக்ககம் திரும்ப பெற வேண்டும். தமிழக முதல்வர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் நேரிடையாக தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும்” என்றார்.

.

Previous Post

TN Govt: அமைச்சரவை மாற்றம் எதிரொலி! மாவட்ட பொறுப்பு அமைச்சர்களை மாற்றி தமிழக அரசு அதிரடி! உங்கள் ஊருக்கு யார் தெரியுமா?

Next Post

Weather Update: அடுத்த 5 நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
Weather Update: அடுத்த 5 நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Weather Update: அடுத்த 5 நாட்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In