உத்தரப்பிரதேசம்: அலிகர் மாவட்டத்தில் பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணின் தலையில் தவறுதலாக காவல் ஆய்வாளர் சுட்டுள்ளார்.
கவலைக்கிடமான நிலையில் அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவலர் ஒருவரிடம் இருந்து துப்பாக்கியை பெற்று, ஆய்வாளர் மனோஜ் ஷர்மா அதனை சரிபார்க்கும்போது பெண்ணின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது.
முன் விரோதம் காரணமாக இப்படி சுட்டாரா என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர். காவல் ஆய்வாளர் மனோஜ் மீது வழக்குப்பதிவு செய்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

