ஹைதராபாத்: தெலுங்கானா மாநில சட்டசபையின் இடைக்கால சபாநாயகராக ஏஐஎம்ஐஎம் கட்சியின் அக்பரூதீன் ஒவைசி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பா.ஜ., கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இன்று நடக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்கும் நிகழ்ச்சியை புறக்கணித்துள்ளது. இது தொடர்பாக கவர்னரிடம் அக்கட்சியினர் மனு அளித்துள்ளனர்.

