வருவாய் மாவட்ட வாரியான பொறுப்பு அமைச்சர்களின் பட்டியலின் படி, சேலம் மாவட்டத்திற்கு கே.என்.நேரு, தேனி மாவட்டத்திற்கு ஐ.பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு எ.வ.வேலு, தருமபுரி மாவட்டத்திற்கு எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், தென்காசி மாவட்டத்திற்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தங்கம் தென்னரசு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு தா.மோ.அன்பரசன், திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சிவ.வீ.மெய்யநாதன், கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வி.செந்தில் பாலாஜி, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு அர.சக்ரபாணி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆர்.காந்தி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு எஸ்.எஸ்.சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் பொறுப்பு அமைச்சர்களாக உள்ளதாக தமிழ்நாடு அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

