சிறைத்துறை டிஜிபி திரு அமரேஷ் பூஜாரி ஐபிஎஸ் அவர்கள் சிறை துறையில் கூண்டுக்குள் வானம் என்ற நூலகச் திட்டத்தை ஜனவரி மாதம் கொண்டு வந்தார்.
இத்திட்டத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கப்பெற்று அனைத்து மத்திய சிறைகளிலும் நூல்கள் பெறப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக நீதித்துறை நீதி அரசர்களும் இத்திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் உத்தமபாளையம் விரைவு நீதிமன்ற நடுவர் திரு ரமேஷ் அவர்கள் இன்று தன்னிடம் வந்த ஒரு வழக்கிற்கு அபராத தொகையாக ரூபாய் ஐயாயிரம் விதித்தார்.
அந்த ஐயாயிரம் ரூபாயை சிறை துறையின் கூண்டுக்குள் வானம் நூலகத் திட்டத்திற்கு நல்ல நூல்களை வாங்கி உத்தமபாளையம் கிளைச் சிறைக்கு வழங்குமாறு உத்தரவிட்டார்.
அதன் அடிப்படையில் அந்த வழக்கின் வாதி ரூபாய் ஐயாயிரம் மதிப்பிலான 39 நூல்களை இன்று உத்தமபாளையம் கிளை சிறைக்கு வழங்கியுள்ளார்



No comment