கோப்புப்படம்
புதுதில்லி: உள்நாட்டில் கிடைக்கும் வெங்காயத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் 2024 மார்ச் 31 வரை வெங்காயத்தின் ஏற்றுமதிக் கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
தேசிய தலைநகரில் உள்ள உள்ளூர் வியாபாரிகள் ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.70 முதல் ரூ.80க்கு விற்று வரும் நிலையில், நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சில்லறை சந்தைகளில் வெங்காயத்தை கிலோவுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் விற்பனை செய்ய மத்திய அரசு அக்டோபரில் முடிவு செய்தது.
அதே வேளையில் இந்த ஆண்டு அக்டோபர் 28 முதல் டிசம்பர் 31 வரை வெங்காய ஏற்றுமதிக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையாக 800 அமெரிக்க டாலர் என நிர்ணயம் செய்யப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் 31ம் தேதி வரை வெங்காயத்திற்கு 40 சதவிகித ஏற்றுமதி வரியை இந்தியா விதித்தது. இருப்பினும், வெங்காய ஏற்றுமதி, மற்ற நாடுகளின் கோரிக்கையின் அடிப்படையில் பிற நாடுகளுக்கு அரசு வழங்கிய அனுமதியின் அடிப்படையிலும் வெங்காய ஏற்றுமதி அனுமதிக்கப்படும் என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்தது.
நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


வெங்காயத்தின் விலை அதிகமாக இருக்கும்போது அதன் ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பது மிகவும் சரியானது அதே நேரத்தில் வெங்காயத்தின் விலை குறையும்போது ஏற்றுமதிக்கு விதித்திருக்கும் தடையை விலக்கிக் கொள்ள வேண்டும்