திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் செயல்படும் HP Gas குருதேவன் ஏஜேன்சியில் முறைகேடாக நுகர்வேர்களிடம் அதிக பணம் வசூல் செய்து வருகிறார்கள் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

மேலும் உஜ்வாலா இலவச கேஸ் இணைப்பு திட்டத்தில் வழங்கப்படும் பயனாளர்களிடம் சோதனை செய்வதாக கூறி ஒரே நபர்களிடம் இரண்டுமுறை பணத்தை வசூல் செய்துள்ளது தெரியவந்துள்ளது. மக்கள் ஆணையம் கள ஆய்வு குழு நேரில் சென்று 50 க்கும் மேற்பட்ட நபர்களிடம் கள ஆய்வு செய்த போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. மேலும் ராயநல்லூர் சுற்றுவட்ட பகுதியில் வேறுவிதமான நிலைமையும் உள்ளது, அதாவது பதிவு செய்ய பணம் தராவிட்டால் கேஸ் சிலிண்டர் மற்றும் காப்பீடு கிடைக்காது, கேஸ் சிலிண்டர் ரத்து செய்து விடுவதாக மிரட்டி மக்களிடம் பணபறிப்பு நடத்தி வருகின்றனர்.
ரூபாய் 236முதல் 524ரூபாய் வரை வசூல் செய்யப்படுகிறதாம். மேலும் ஒரு சிலிண்டர் விலையை ரசீதை விட ரூபாய் 50ல் இருந்து 100வரை அதிகமாக கட்டாய வசூல் செய்யப்படுகிறதாம். எதற்க்காக கூடுதல் கட்டணம் என்று கேஸ் பயனாளர்கள் கேட்டால் அதற்க்கு அவர்கள் வண்டி வாடகை ஆள் கூலி மற்றும் ஏஜேண்சிக்கு தர வேண்டும் என்று பதில் கொடுக்கிறார்களாம். இந்த கொடுமையை GAS நிறுவன SO அதிகாரிக்கு புகார் கொடுத்தால் அவர் கண்டுகொள்வதில்லை, இதனை மாவட்ட ஆட்சியர் கண்டுகொள்வாரா? சம்மந்தப்பட்ட கேஸ் நிறுவத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ? பொறுத்திருந்து பாப்போம்.


No comments