Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

முதல்வர் குறித்து அவதூறு கருத்து பரப்பிய விவகாரம் : வழக்கை ரத்து செய்யக் கோரி மனு..!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 8, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
1
முதல்வர் குறித்து அவதூறு கருத்து பரப்பிய விவகாரம் : வழக்கை ரத்து செய்யக் கோரி மனு..!
16
SHARES
26
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பரப்பியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி முன்னாள் டிஜிபி நட்ராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் டிஜிபியும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நட்ராஜ், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு பற்றியும், முதல்வர் ஸ்டாலின் பற்றியும் அவதூறு கருத்துகளை வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக திமுக வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த ஷீலா என்பவர் திருச்சி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்து இருந்தார்.

Former DGP Nataraj appeals in Madras High Court seeking quashing of defamation case

அந்த புகாரில், ஓய்வு பெற்ற டிஜிபி நடராஜ் வாட்ஸ் அப் குழுவில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், இந்துக்கள் வாக்களித்துதான் வெற்றி பெற வேண்டும் என்றால் அப்படி ஒரு வெற்றி தேவையில்லை. இந்துக்களின் வாக்குகளை பெறும் அளவுக்கு திமுக தரம் தாழ்ந்து விடவில்லை என்று முதல்வர் கூறியதாக தவறான தகவலை பகிர்ந்துள்ளார்.

நடராஜின் பதிவு தமிழக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் உள்ளது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கூறப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில், நட்ராஜ் மீது திருச்சி சைபர் க்ரைம் போலீசார் ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென நட்ராஜ் சார்பில், நீதிபதி ஜெயச்சந்திரன் முன் முறையிடப்பட்டது.

அதற்கு பதிலளித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு திருச்சியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அது தொடர்பாக மதுரை கிளையில் தான் மனு தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தார். மதுரை கிளையில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்திய நீதிபதி, எண்ணிடும் நடைமுறைகள் முடிந்த பின்னர் அதனை விசாரிப்பதாகவும் தெரிவித்தார்.

Previous Post

மழைநீர் வடிகால் பணிகளின் மொத்த மதிப்பீடு ரூ.5,166 கோடி. ஆனால் இதுவரை ரூ 2,191 கோடி மதிப்பீட்டிலான பணிகள் மட்டுமே முடிந்துள்ளன : அமைச்சர் நேரு

Next Post

திருத்துறைப்பூண்டி HP காஸ் ஏஜென்சி முறைகேடு – உஜ்வாலா இலவச கேஸ் திட்டத்தால் ஏமாற்றப்படும் ஏழைகள்..

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
திருத்துறைப்பூண்டி HP காஸ் ஏஜென்சி முறைகேடு –  உஜ்வாலா இலவச கேஸ் திட்டத்தால் ஏமாற்றப்படும் ஏழைகள்..

திருத்துறைப்பூண்டி HP காஸ் ஏஜென்சி முறைகேடு - உஜ்வாலா இலவச கேஸ் திட்டத்தால் ஏமாற்றப்படும் ஏழைகள்..

Comments 1

  1. Rajalingam Chennai says:
    3 years ago

    No comments

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In