Friday, November 13, 2026
Makkal Aanaiyam
No Result
View All Result
  • Login
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்
No Result
View All Result
Makkal Aanaiyam
No Result
View All Result
Home Default

திமுக இளைஞர் அணி மாநாடு 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Makkal Aanaiyam by Makkal Aanaiyam
December 8, 2023
in Default, அரசியல் செய்திகள், சமீபத்திய செய்திகள், டிரெண்டிங் செய்திகள், தமிழ்நாடு செய்திகள், ஹாட்ஸ்டார்
0
திமுக இளைஞர் அணி மாநாடு 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
54
SHARES
87
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Telegram

மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையை அடுத்து தற்போது வெள்ள நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால் திமுக இளைஞர் அணி மாநாடு  ஒத்திவைக்கப்படுவதாக இன்று (டிசம்பர் 8) அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2007-ல் நெல்லையில் முதல் மாநாடு நடைபெற்ற நிலையில், திமுக இளைஞரணியின் 2-வது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் வரும் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பொறுப்பேற்று நடைபெறும் முதல் மாநாடு என்பதாலும்,

முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது என்பதாலும் இதனை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

மாநாடு குறித்த விழிப்புணர்வை இளைஞர்களிடையே ஏற்படுத்த இருசக்கர வாகனப் பேரணியை கன்னியாகுமரியில் இருந்து கடந்த மாதம் 15-ம் தேதி உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனையடுத்து திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களை சந்தித்து மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன் முன்னோட்டமாக மாநாட்டுக்கான அழைப்பிதழை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் துரைமுருகனிடம் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் அளித்து வாழ்த்து பெற்றனர்.

சுமார் 10 லட்சம் பேர் இதில் கலந்துகொள்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்புடன் தொடர்ந்து இளைஞர் அணி மாநாடு தொடர்பான பணிகள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் கடந்த 4ஆம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

தொடர்ந்து வெள்ளம் தேங்கியுள்ள பகுதிகளில் 5வது நாளாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் முதல்வர் முதல் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் என அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை கருத்தில் கொண்டு, அடுத்த சில நாட்களுக்கு வெள்ள நிவாரண பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக சேலத்தில் வரும் 17ஆம் தேதி நடைபெற இருந்த திமுக இளைஞரணி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக வரும் 24ஆம் தேதி இளைஞரணி மாநாடு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

அரசு சார்பில் எங்கும் நலத்திட்ட உதவிகள் செய்தது போல எங்கள் கண்களுக்கு தென்படவில்லை…! – OPS வருத்தம்.

Next Post

மதுபானங்களுக்கு அதிக வரி வசூலிக்கவேண்டும் : WHO வலியுறுத்தல்..!

Makkal Aanaiyam

Makkal Aanaiyam

Authenticated live Tamil flash news

Next Post
மதுபானங்களுக்கு அதிக வரி வசூலிக்கவேண்டும் : WHO வலியுறுத்தல்..!

மதுபானங்களுக்கு அதிக வரி வசூலிக்கவேண்டும் : WHO வலியுறுத்தல்..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
Call us: +91 44 3586 5999

© GKM Apps | Software development firm

No Result
View All Result
  • Home
  • அரசியல் செய்திகள்
  • தமிழ்நாடு செய்திகள்
  • சமீபத்திய செய்திகள்
  • டிரெண்டிங் செய்திகள்
  • ஹாட்ஸ்டார்

© GKM Apps | Software development firm

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In