புதுடில்லி: பிரதமர் மோடி முன் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கைகூப்பி குனிந்து வணங்கிய வீடியோ வைரலானதை தொடர்ந்து, ‘அது என் இயல்பு, இனி எப்படி கும்பிட வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்’ என கவலைப்பட கூறியுள்ளார் ஜக்தீப் தன்கர்.
துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்டோர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பிரதமர் மோடியை பார்த்து கைகூப்பி, குனிந்து வணங்கினார் ஜக்தீப் தன்கர். இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சித்திருந்தனர்.
இது குறித்து ராஜ்யசபாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கூறியுள்ளதாவது: இப்போதெல்லாம் நான் எவ்வளவு கும்பிட வேண்டும், யார் முன் பணிந்து வணங்க வேண்டும், எந்தக் கோணத்தில் இருந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டி உள்ளது. கூப்பிய கைகளுடன் குனிந்து வணங்குவது என் இயல்பு. முன்னால் யார் இருக்கிறார்கள் என்று நான் பார்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

