கடந்த 2 ஆண்டு காலமாக நடிகர் விஜய் அரசியலுக்கு அச்சாரம் போடுவதாக செய்தி பரவுகிறது. அதை நோக்கி தான் ஒவ்வொரு தடவையும் நலத்திட்டங்கள் செய்து வருகிறார். கடந்த முறை தான் படித்த பள்ளி மாணவர்களுக்கு, வைர நெக்லஸ், தங்க செயின், பண உதவி செய்தார். பிறகு மகளிரணி , இளைஞர் அணி ஆலோசனை கூடங்கள் நடத்தினார். தற்போது மிக்ஜம் புயலால் சென்னை பெரும்பாலும் பாதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று ரசிகர்கள், பொறுப்பாளர்கள் நலத்திட்ட உதவி செய்ய ஆலோசனை வழங்கினார்.
அதன் அடிப்படையில் இன்று விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பாதிக்கப்பட மக்களை அழைத்து உணவு வழங்கினர். இதில் அவர்கள் ஒரு முதியோர் இல்லத்திலும் உணவு வழங்கினர், அதில் முதியவர்கள் ஏராளமானோருக்கு உணவு வழங்கினர்.
ஒவ்வொரு இலையிலும் உணவு பரிமாறும்போது விஜய் புகைப்படத்தை வைத்துக்கொண்டு போஸ் கொடுத்தது விஜய் ரசிகர்களின் கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா என்று அப்பகுதி மக்கள் முனுமுனுக்க வைத்தது.


எல்லாமே ஒரு விளம்பரம் தான் இதற்கு மேல் சொல்வதற்கு இந்த விவகாரத்தில் ஒன்றும் இல்லை