பாட்னா: இண்டியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணியை ஒருங்கிணைத்தவரான நிதீஷ் குமார் பங்கேற்க மறுப்பதாக கூறப்பட்டது. இதற்கு நான் இல்லாமல் ஆலோசனை கூட்டமா?. எனக்கு காய்ச்சல் என நிதீஷ்குமார் சமாளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார்.
மாநில தேர்தல்களில் இண்டியா கூட்டணியை புறக்கணித்து தனியாக போட்டியிட்டு தோல்வியடைந்த காங்., மீது கூட்டணி கட்சிகள் அதிருப்தியில் உள்ளனர். இதனால் இன்று (டிச.,6) காங்கிரஸ் அழைத்து இருந்த ஆலோசனை கூட்டத்தில் இண்டியா கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் பங்கேற்காமல், அவர்களின் கட்சி பிரதிநிதிகளை அனுப்புவதாக அறிவித்தன. இதனால் கூட்டத்தை டிசம்பர் 3வது வாரத்திற்கு ஒத்திவைத்துப்பதாக காங்., அறிவித்துள்ளது.
நான் இல்லாமல் எப்படி?
இது குறித்து நிதீஷ் குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நான் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று செய்திகள் வந்தது. நான் காய்ச்சலில் இருந்தேன். நான் கூட்டத்திற்கு செல்லாமல் இருக்க முடியுமா?. கூட்டணியின் அடுத்த கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

